பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/246

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244 'வித்திய உழவர் நெல்லொடு பெயரும் பூக்கமல் ஊரன்? என்ற தொடரால்-விளைவு கருதி வித்திய உழவர் வளைந்து முதிர்ந்துள்ள நெல்லைக் கொண்டு பெயரும் ஊரன் என்றதனால்-தலைமகன் பின்வரும் பரத்தை யர்க்கு வேண்டுவன புரிந்து அக்காலத்து நுகர்ச்சிக்குச் சமைந்துள்ள பரத்தையரைக் கூடி ஒழுகுகின்றான் என்ற உள்ளுறையும், இனி விளைவு வேண்டி விளைத்த உழவர் அவ்வாறே விளைந்த நெல்லைக் கொண்டு பெயரும் ஊரனாயினும் இல்லறப் பயனை வேண்டி இவளை மணந்த பின் அது பெருமை ஒழுகியது. என்னை (என்ன) என இறைச்சிப் பொருளும் தோற்றியது.' இவ்வாறு பல இறைச்சிப் பொருள்கள் ஐங்குறு நூற்றில் இடம் பெற்றுள்ளன. 'பூத்த கரும்பில் காய்த்த நெல்லில் கழனி ஊரன்: ' என்ற தொடரில் உள்ளுறைப் பொருள் அமைந்துள்ளது. பூத்துப் பயன்படாக் கரும்பினையும் காய்த்துப் பயன்படும் நெல்லினையும் உடைய ஊரன் என்றது, ஈன்று பயன் படாப் பொது மகளிரையும், மகப்பயந்து பயன்படும் குலமகளிரையும் ஒப்பநினைப்பான் என்ற குறிப்பு அமைந் துள்ளது. தோழியின் கூற்றாக வரும் இப்பத்துப் பாடல் களிலும் உள்ளுறை இறைச்சிப் பொருள்கள் பொருந்திச் சுவைநயம் தருகின்றன. to 7-ஐங்குறுநூறு வேட்கைப்பத்து, பாட்டு 375 8. ஐங்குறுநூறு; வேட்கைப்பத்து 4 : 4-5. -