பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/247

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. கலித்தொகை எட்டுத்தொகை நூல்களுள் பாவின் பெயரைப் பெற்ற நூல்கள் பரிபாடலும் கலித்தொகையுமாகும். தொல் காப்பியனார் அகத்திணையாகிய அகப்பொருட் செய்தி. களைப் பாடுதற்கு உரிய தகுதி வாய்ந்த பாவாகக் கலிப்பா வினையும் பரிபாட்டினையும் குறிப்பிட்டுள்ளார். கலிப் பாவின் சிறப்பு ஒசைநயம் விரவி வருதலாகும். சங்கத்தார் தொடுத்த கலிப்பாட்டு நூற்றைம்பது என்று பேராசிரி யரும், இறையனார் அகப் பொருள் உரையாசிரியரும்: குறிப்பிட்டுள்ளனர். ஏனைய தொகை நூல்களிற் போலப் பாடல்களில் சிதையும் குறைவும் இன்றிக் கலித்தொகை கடவுள் வாழ்த்துச் செய்யுளோடு நூற்றைம்பது பாடல் களைக் கொண்டு விளங்குகின்றது. இதைத் தொகுத்தவர் நல்லந்துவனார். தொகுப்பித்தவர் யாரென்று தெரிய வில்லை. இந்நூற்றைம்பது பாடல்களும் ஐந்து திணை யாகப் பகுக்கப்பட்டுப் பாலைக்கலி, குறிஞ்சிக்கலி, மருதக் கலி, முல்லைக்கலி, நெய்தற்கலி என வழங்கப்படுகின்றன. இவற்றைப் பாடுபவர்கள் முறையே பெருங்கடுங்கோ, கபிலர், மருதனிளநாகனார், நல்லுருத்திரன், நல்லந்து வனார் என்னும் ஐவர் என்று வெண்பா ஒன்று கூறு கின்றது.* 1. தொல்; அகத்திணை இயல் : 53. 2. தொல், செய்யுளியல்: 149, 153, 154, 160 உரை. 3. இறையனார் அகப்பொருள்: நூ. 1. 4 பெருங்கடுங்கோன் பாலை கபிலன் குறிஞ்சி மருதனிளநாகன் மருதம் அருஞ்சோழன் நல்லுருத்திரன் முல்லை நல்லந்துவன் நெய்தல் கல்விவலார் கண்ட கலி,