பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/248

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246 கலித்தொகையை முதன் முதலாகக் கி. பி. 1887-ல் பதிப்பித்த இலங்கைத் தமிழ் அறிஞர் திரு. சி. வை. தாமோதரம் பிள்ளை அவர்கள் நல்லந்துவனார் கலித் தொகை என்றே குறித்துள்ளார். பேராசிரியர் எஸ். வையாபுரிப்பிள்ளை அவர்கள், .ெ ந. ய் த ற் பகுதியின் ஆசிரியராகக் குறிக்கப்பட்ட நல்லந்துவனாரே ஏனைய பகுதிகளுக்கும் ஆசிரியராய் இருத்தல் கூடும் என்றும், ஐவர் பாடியதாகக் குறிப்பிடும் வெண்பா மிகப் பிற்பட்ட காலத்தது என்றும், நூலின் நடை, அமைப்பு, போக்கு முதலிய சில தனி இயல்புகளைக் கவனித்தாலும் இஃது ஒரே ஆசிரியர் இயற்றியதாகும் என்றே கொள்ளத் தக்கது என்றும் கருதுகின்றார். குறிப்பிலிருந்தும் இக்கருத்து வலிமையுறுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார். But whether (he Nallanthuvanar) was also the auther of the other sections, we have no means of determining. The style and dictions and certain other peculiarities indicate that he was most probably the author of the entire work. However a stanza is qutted ascribing the fire sections of work, to five different authors. This stanza is not found in manuscript and therefore of modernorigin." பாண்டிய மன்னனைக் குறித்தும், அவன் தலைநக ராகிய கூடல் குறித்தும், வையை ஆறு குறித்தும், திருமருத முன்றுறை குறித்தும் நிறைந்த செய்திகள் கலித் தொகையில் இடம் பெற்றிருக்கச் சேர சோழ நாடுகளைப் பற்றிய குறிப்பு இந்நூலில் ஒன்றும் இல்லை என்ற கருத்து ஆழ்ந்து சிந்தித்தற்குரியது. எனவே இந்நூல் மதுரை நகரைச் சார்ந்தெழுந்த பாடல்களையே கொண்டது: என்று கூறுவர்.8 5. Prof. S. Vaiyapuri Pillai, History of Tamil Langu age and Literature, page 27. 6. கலைக்களஞ்சியம்; மூன்றாந் தொகுதி: பக்கம் 335.