பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/249

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

247 பாவகையாலும் பொருள் வகையாலும் சொல் வகை யாலும் இந்நூல் பிற தொகை நூல்களோடு வேறுபடு கின்றது. கலித்தொகைப் பாடல்களில் புராணக் கதைக் குறிப்புகள் பலவாகவும் பிற தொகை நூல்களில் காணப் படாத காமன் வழிபாடு பற்றிய செய்தியும், மொழி வளர்ச்சியில் பிற்காலத்தவையாகக் கருதப்படும் சில சொற்களும் ஒத்த அன்புடைய காதலனின் வாழ்வே அன்றி ஒத்த அன்பில்லாத மக்களின் உறவு பற்றிய கைக்கிளை, பெருந்தினைப் பாட்டுக்களும் உள்ளன. நாடக முறையில் காதல் நிகழ்ச்சிகள் அமைந்திருப்ப தோடு இனிய ஓசை அமைதியும் பாடல்களில் துலங்கு கின்றன. இக்கலிப்பாக்கள் எல்லாம் சங்கு திரண்டு முரண்டெழும் ஒசை போன்ற தழைந்து இன்பம் பயக்கும் ஒசை நயம் உடையன என்றும், பாடல்களின் பொருள் வளமும் கருத்து மாண்பும் அளவிடற்கரிய சிறப்பினை உடையன என்றும், உவமங்களின் மாட்சியும் இணையற்ற சிறப்பினை உடையன என்றும் பண்டித ந. மு. வேங்கட சாமி நாட்டார் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்." கலித்தொகையின் காலம் சங்க இறுதிக் காலமான கி.பி. 300 என்றும் பாண்டிய நாட்டுப் புலவர் ஒருவரால் பாடப் பெற்றிருத்தல் வேண்டும் எனக் கொள்வது மிகவும் பொருத்தமானது என்றும் டாக்டர் மா. இராசமாணிக்க னார் அவர்கள் கருதுகின்றார்கள்." பாலைக் கலிப் பாடல்கள் முப்பத்தைந்தாகும். இதனைப் பாடியவர் பெருங்கடுங்கோ ஆவர். இவர் சேர அரச மரபினர் என்பர். ஆயினும் பாடல்களில் சேர 7. கலித்தொகைச் சொற்பொழிவுகள்: பக்கம் 11. 8. தமிழ்மொழி இலக்கிய வரலாறு: சங்க காலம் முதற் பதிப்பு : 1963 பக்கம் 199. 9. டாக்டர் உ. வே. சாமிநாத ஐயர், குறுந்தொகைப் பதிப்பு. பாடினோர் வரலாறு பக்கம் 156.