பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/250

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248 நாட்டைப் பற்றிய குறிப்பில்லை. மாறாகப் பாண்டிய நாட்டைப் பற்றியும் வையை பற்றியும் கூடலில் நிகழும் புலவர் கூட்டுப் பற்றியும் (தமிழ்ச்சங்கம்) குறிப்புகள் வந்துள்ளன. பாலைக் கலியில் இடம் பெற்றுள்ள இதிகாசக் கருத்துகள், அரசியல் செய்திகள். மதுரை வையை பற்றிய குறிப்புகள், பழக்க வழக்கங்கள், இயற்கை வருணனை, உவமைகள், அகப்பொருள் நுட்பம் முதலிய வற்றைக் காண்டோம். இதிகாசக் கருத்துகள் கலித்தொகையில், குறிப்பாகப் பாலைக் கலியில் இதிகாசக் குறிப்புகள் கையாளப்பட்டுள்ளன. படைத்தல் தொழிலுக்குரிய அயன் முதலான தேவர்கள் வேண்டிக் கொண்டதற்கு இணங்க, வஞ்சனை செய்யும் இயல்புடைய அவுணரை வலியடக்க மூன்று கண்ணை உடைய இறைவன் மூன்று எயிலையும் சினந்து எரித்தான். முக்கண்ணன் மீண்டும் மழு ஏந்தி எரிக்கும் இயல்பினன் என்பதும் சுட்டப் படுகின்றது.' அருந்ததி போல் எல்லாருந் தொழுதேத்தும் கற்புடை யாள் என்று தலைவி மேம்படுத்தப்படுகின்றாள். ' பாரதக் கதை யொன்றும் பாலைக் கலியில் குறிக்கப்படு கின்றது. திருதராட்டினனுடைய மகன் துரியோதனன் சூழ்ச்சியாலே ஐவரென்று உலகம் புகழும் தருமன் முதலா னோரை அரக்கு மாளிகையில் அடைத்து நெருப் பிட்டான். ' 10. கலித்தொகை: 1 : 1-5 11. 6 : 1 ול , 12. 1 גם. o 21 13. , 24 : 1-4 | 1