பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/251

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

249 புராணக் குறிப்பொன்றும் பொதிந்துள்ளது. கடலி டத்து நின்ற மாமரத்தைப் பிளந்து போகுமாறு தடித்த வெற்றி வேலையுடைய மு. ரு க ன் என அச்செய்தி வந்துள்ளது. * கலப்பைப் படையினைக் கொண்டவன் என்று பலராமனைப் பற்றிக் கூறுகின்றது ஒரு பாடல்.' அரசியல் செய்திகள் ஊரும் ஆறும் பாண்டி நாட்டிற்குரியவையே. கையாளப்பட்டதைப்போல் ஒரு பாடலில் பாண்டிய மன்னனின் வாய்மை தவறாப் பண்பு சுட்டப்படுகின்றது. '" படையெடுத்த நாடு பாழ்பட்டதைக் கண்டு அரசன் வருந்துவான் என்று ஒரு பாடலில் சொல்லப்பட்டுள்ளது.' கண்ணோடாது முறை வழங்குவான் அரசன் என்று ஒரு பாடலில் சொல்லப்பட்டுள்ளது. அதே பாலைக் கலியில் தான் அரசனின் கொடுங்கோன்மை பற்றியும் குறிப்புகள் வந்துள்ளன. 9 நயனில்லா அமைச்சன் சொல் நச்சிய அரசனின் கொடுங்கோல் என்றும், குடிமக்கள் கூக்குரலிட்டு அழ வரி வாங்கும் கொடுங்கோல் என்றும், முறைகெட்ட மன்னவன் கீழ் வாழும் மக்கள் கலங்கும் கலக்கம் என்றும் கொடுங்கோன்மை குறிக்கப் படுகின்றது. அரசன், தன்னுடைய நிழலில் வாழும் நாட்டினர்க்கு ஊறு நேர்ந்தால் அந்நாட்டினையும் காத்திடுவான் எனக் குறிக்கப்படுகின்றது. " 14. கலித்தொகை: 26 : 15-16 15. - E. 35 : 1. 16. 5 34: 24-25. 17. 7 : 4 : 12. 18. 7 : 7 : 15-17. 19. 7 : 10–2; 9 : 5.7; 33 : 14-15. 20. 19-20 : 25 ,15-6 : 25 ;11-2 : 25 ר ת.