பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/252

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250 போர் மேற் சென்ற புரவலன் வாகை சூடி வலம் வருவான்; அவ்வமயம் களிறு மீதும், குதிரை மீதும், தேர் மீதும் இவர்ந்து வருவான் எனப் புகழப் படுகின்றான். இருபெரும் வேந்தர் முட்டிப் போரிடும் போது இடை நின்று போர் தணித்தலும் உண்டு எனப் பாலைக்கவி கூறுகின்றது. 22 வேந்தன் சினந்து படை கொண்டால் பகைநாடு அழிவது திண்ணம் என்றோர் இடத்தில் கூறப்படுகின்றது. 23 மதுரை, வையை பற்றிய குறிப்புகள் பாலைக்கலியில் பாண்டிய நாட்டுத் தலைநகராம் மதுரை பலபடப் புகழப்பட்டுள்ளது. சேர நாட்டுப் புலவர் எழுதியதாகச் சொல்லப்படும் பாலைக் கலியில் சேரநாட்டு ஊர் எதுவும் சிறப்பிக்கப்படலாம் என்று நாம் எதிர்பார்க்க, பாண்டிய நாட்டு ஊர் சிறப்பிக்கப்படுவதோடு பாண்டியன் வையையும் குறிக்கப்பட்டுள்ளதைக் காணலாம். கூடல் என்றும், வென்வேலான் விழும்பி உறையும் குன்று என்றும் அளவிலாப் புகழுடைய கூடல் என்றும் 28 நிலத்துள்ளார் புகழும் நீண்ட மாடங்கள் விளங்கும் கூடல் என்றும் உயர்ந்த கூடல் என்றும் 29 மதுரை பல இடங்களில் சிறப்பிக்கப்படுகின்றது. பரத்தையர் திரளோடு மனம் விரும்பப் பாய்ந்தாடும் வையை என்றும், அறல் மணல் உண்டாகி ஒழுகும் - == 21. கலித்தொகை, 30 : 9.10; 13.15, 17.18. 22. 5 y 23 : 11-13. 23. 15 12 : 1. 24. 1 1 26 : 12. 25. 5 : 26 : 16. 26. 5 : 29 : 11. 27. 15 34 : 17. 28. + 1 30 ; 25. 29. * † 26 : 20.