பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/254

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252 கண்ணகியைப் போல இங்குத் தலைவன் பிரிவெண்ணி வாடுந் தலைவி அவர் செல்லுங் காட்டின் அருமை மாறி இனிது திரும்பிய மற்றத் தெய்வங்களைத் தொழலாமோ என ஏங்க, பிற தெய்வம் தொழல் வேண்டா, உன் கற்பின் வலிமையாகிய அறமே அவர் இடுக்கணைக் களையும் என்று தோழி கூறுவதில் இருந்து கற்புடை மகளிர் கடவுளர் தொழார் என்னும் பழக்கத்தை அறியலாம். தலைவன் தலைவியின் தோளில் ஆர்வம் மிகக் கொண்டு தொய்யில் எழுதுவான் அன்புடை நேரத்தில் என்பது குறிக்கப்படு கின்றது. 38 நறிய கூந்தலை விரும்பி நீவுவான் . " பெண்கள் மணலிடத்து வண்டல் இழைத்து ஆடும் விளையாட்டும்,49 காமனுக்கு எடுக்கப்படும் திருவிழாவும் அவ்விழாவில் பரத்தையரோடு தலைவன் ஆடுவதும்' குறிக்கப்படுகின்றன. அந்தக் காமன் திருவிழா இளவேனிற் பருவத்தில் நிகழும். காதலன் காதலிக்குத் துாது அனுப்பும் செய்தியும், தூது வருவார்க்குத் தகுந்த விருந்து செய்வர் எ ன் பது ம் உணர்த்தப்படுகின்றன. திருக்குறளிலும் காதலின் தூதாக வந்த கனவினுக்கு என்ன விருந்து செய்வது என்று காதலி திகைப்பதைக் காணலாம். தலைவியைப் பிரிந்திருக்கும் தலைவன் குறித்த காலத்தில் குதிரை பூட்டிய தேருடன் வந்து சேருவான் என்பதை அறியலாம்.** 37. கலித்தொகை; 15:18-22. 38. 2-3 :17 י כ. 39. 11 20 : 6. 40. 5 : 28 נג. 41. : 1 29 : 13-14. 42. 15 35 : 8-10. 43. 5 * 31 : 18-19. 44. ,, . 33:22-24.