பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/255

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

253 இயற்கை வருணனை பாலைக்கலியில் வழியின் கொடுமை பெரிதும் பேசப் படுகின்றது. பாலைநில வறுமை உள்ளத்தைத் தாக்கும் வண்ணம் புனையப்பட்டுள்ளது. கணிச்சிப்படையுடைய கடவுள் சினந்து மூன்று எயிலையும் எரித்தால் உதிர்வதைப் போல் ஞாயிறு சுடுகையினால் போவோர்க்கு வழியில்லாமல் வரையிணைந்து கிடக்கும் வழி எனப்படும். தலைவன் செல்லும் இடைச்சுரத்தில் நீரில்லாச் சுனையில் வாடி வதங்கும் கிளைகளோடு கிடக்கும் மலர்களும், மரத்தில் படர்ந்து பிரிந்துவிட்ட வாடிய கொடிகளும், வதங்கிய தளிர்களும் இருந்து வறட்சியை மிகுதிப்படுத்தின என்கிறார் புலவர். 8 கொள்ளுதற்கு ஒரு பொருளும் இல்லாராயினும் அவரைத் தம் அம்பாலே வீழ்த்தி அவர் பதைப்பதைக் கண்டு மகிழும் கடுங்கண் மறவர் வாழும் இடைச்சுரம். அம்புபட்டுப் பதைத்தோடுவதைத் தொடர்ந்து சென்று கொல்வர் மறவர். இக்கொடுமையைக் கண்டு பறவை களும் பறப்பதற்கு அஞ்சும் அந்தச்சுரம் என்று பாலைக்கலி கூறுகின்றது.' யானைத் திரளும் மற்ற விலங்குகளும் மறவரும் மயங்கித் திரிவதாலே வழிகள் தூறுகளால் மறைந்துவிட்ட இடைச்சுரம் என்கிறது ஒரு பாடல். வழிச் செல்வோரை ஆறலைகள்வர் அம்பெய்து கொல்கையில் அவர்களுடைய நீர் வேட்கையால் நாவினை நனைப்பதற்கு ஒரு சொட்டு நீரும் இல்லாமல் தவிக்கவும் அவர்கள் கண்களில் திரண்டு நிற்கும் நீர்த் துளிகளே உருண்டு வாயில் விழும் கடுமையான 45. கலித்தொகை; 1 : 6.8. 46. 15 2 : 8-9, 13-14, 16-17. 47. 17 3 : 3.6. 48. | 1 4 : 1-3.