பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/256

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254 பாலை வழி என்கிறது ஒரு பாடல். தண்ணிர் இன்மை யான் கானல் நீரைத் தேடி ஒடும் களிறுகள். யானைகள் ஈரமற்ற நிலத்தை உழுகின்ற கலப்பைகள் போலக் கொம்பு களை ஊன்றிக் கையை நிமிர்ந்து நிலத்தே கிடக்கும்." யானைக் கன்று கலக்கிய சிறிது நீரைப் பிடியுண்ணுமாறு செய்து பின்னர் உண்ணும் களிறு, மடப்பெடையின் வருத்தத்தை மென்சிறகால் ஆற்றும் புறவு, நிழல் இல்லாது வருந்திய மடப்பிணைக்குத் தன் நிழலைத் தந்து மகிழும் கலை என்று கொடிய பாலை வழியில் குளிர்ந்த அன்புக் காட்சிகளைப் பற்றிக் கூறப்படுகின்றது. மறவர் கொன்ற வழிப்போக்கரின் உடல்களை இலைகள் மறைத்திருக்கும். தண்ணிர் இருக்கும் என்று வேட்கையோடு யானைத்திரள் வற்றிய சுனையில் துதிக்கை இடவும், வெயிற்குடு பொசுக் கிடத் திசைதோறும் வழி மயங்கி ஒடும் சுரம் எனப்படு கின்றது. ” கானல் நீரை நச்சி ஒடும் மான் கூட்டங்களும், கொதிக்கும் மலைகளும், ஊனின்றி வருந்தும் மந்திகளும், நீரின்றிச் சேற்று ஈரத்தை மட்டும் சுவைத்துப் போகும் உயிரைப் பிடித்து வைக்கும் யானைகளும் நிரம்பிய மழை யில்லா வெஞ்சுரம் என்கிறது ஒரு பாடல்.* மறவர்கள் வழிச் செல்வோரிடம் உள்ள பொருளைக் கொண்டு அவர்கட்குப் புண்ணைக் கொடுப்பர் என்கிறது ஒரு .பாடல்." 49. கலித்தொகை; 5 : 1.6. 50. 11 6 : 1-3. 51. 1 : 7 : 3-6. .52. 16-17 ,12-13 ,9–8 : 10 תוב. 53. 1 11 : 1-7. 54. 5 - 12 : 1-9. 55. ,, 14 : 7-9.