பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/257

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

255 சில சிறிய சொற்களில் பாலையின் அரிய இயல்புகள் விளக்கப்பட்டுள்ளன. பகல்முனி வெஞ்சுரம்' நூங்கழல் வெஞ்சுரம்' சுடர்காய் சுரம் 8 நெடுமலை வெஞ்சுரம்" இளவேனிலைப் பற்றிப் பாலைக்கலியில் அழகொழுகப் பல இடங்களில் திறம்படப் புனையப்பட்டுள்ளது. பல வரி களுடைய வண்டுகள் புத்தம் புதிய மலர் ஊதப் பறந்திடும் பருவம் எனப்படுகின்றது இளவேனில். மராம், செருந்தி, காஞ்சி, ஞாழல், இலவம் ஆகிய பூக்கள் மரங்களில் அழகு செய்யப் பிரிந்தார்க்கு வருத்தமும் பிணைந்தார்க்கு மகிழ்ச்சியும் அளித்து வருகின்றது." மக்கள் தழைக்கவும், மணமுள்ள மெளவல் முகை அவிழவும், அறல் மணல் ஆற்றில் தாதும் தளிரும் உதிர்ந்து அழகு செய்யவும் இளவேனில் வந்துற்றது என வருணிக்கப்படுகின்றது. மரங்களில் கிளைகள் தோறும் வேண்டும் தாது உண்டு மகிழ வண்டுகள் பறந்து வரும் வளப்பம் நிறைந்து விளங்கும் இளவேனில்.98 ஆறுகள் அழகு பெற ஓடவும், தாமரை மலர்கள் பூத்திடவும் முன்பணிக்கும் பின் பனிக்கும் மேலாய் நின்ற இளவேனில் எனப்படுகின்றது.கே முல்லை மலர்கள் பூத்துக் குலுங்க, பசந்தவர் பைதல் நோய் தணித்து இன்னுயிர் மருந்தாகிக் 56. கலித்தொகை: 18 : 5. 57. > * 19 : 6. 58. , 21 : 20. 59. 5 * 23 : 21. 60. 2 : 25 נית. 61. 5 25 : 1-8. 62. 1-8 : 26 נת. 63. 5 * 29 : 1-4. 64. * > 20 : I-7.