பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/258

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256 x காதலர் துாதாக வந்தது இளவேனில். குளங்கள் :நீர் நிறைந்து பூக்களால் அழகு பெறவும், முருக்கு இதழ்கள் காம்பினின்றும் கவிழ்ந்து விழவும், மரங்கள் எல்லாம் அரும்புகள் ஈன்று பல மணிகளைச் சூடினாற்போல் பூக்களைச் சூடவும் காதலர்ப் புணர்ந்தவர் கவவுக்கை நெகிழாது தாதவிழ் இளவேனில் வந்தது எனப் புனையப் படுகின்றது. இளவேனிற் காலத்தில் நீர் இற்று ஒழுகும் எனத் தெரிகின்றது. சுரும்புகள் ஒலிக்க வண்டுகள் ஆரவாரிக்கும் படியாகக் கொம்புகளினின்றும் பல மலர்கள் ஆற்றிலே வரும்படி இனிமை பொருந்திய இளவேனில் என்கிறது ஒரு பாடல். சோம்பல் இல்லாதவன் செல்வம் பெருகுமாறு போல மரங்கள் பூப் பெருக்கவும், அச் செல்வத்தை உண்பாரது நுகர்ச்சிபோல அம்மரங்களிலே தேனையுண்டு மிஞ்றுகள் ஆரவாரிக்கவும், கரிய நிறத்தை உடையவன் மேனிபோலத் தளிரை ஈனவும், அந்நிறத்தில் பரந்த சுணங்குபோல அந்தத் தளிரின் மேலே தாது விழவும், அந்த மலர் பரந்த சோலையை அணுகிப் பளிங்குப்ோலும் நீரினை உடைய குளங்கள் வற்றாது நிற்பவும், பூப் பரந்த துறைகளை அணுகி நுண்மணலைக் கோலஞ் செய்து அறுதியையுடைய நீர் ஒழுகவும் என இளவேனில் வருணிக்கப்படுகின்றது. கரிய குயில்கள் கூவ விளங்கும். இளவேனில், குழவி வேனில் எனப்படுகின்றது.10 வாடை, மாலை, இரா, சின் மழை, பனி, வையை வாடையைப் பற்றிய குறிப்பும் வந்துள்ளது. வாடை வந்து துன்பந்தரும் என்றும், அணிகள் குளிரும்ப்டியாக 65. கலித்தொகை; 31 : 14.18. 66. H. W. 32 : 1-8. 67. 15 32 : 20. 68. | 33 : 1-7. 69. 51 34 : 1-7. 70. † - • 35: 8-9.