பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/259

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

257 வாடை வரும் என்றும் கூறப்படுகின்றது." தேனை உண்ணும் கரிய தும்பியினது யாழோசையை ஒத்து முழங்கு கின்ற ஓசை நடக்கும் மாலைக் கால்ம் என்றும், நெடிய நிலாவையுடைய இராக் காலம் என்றும்,தோள்கள் குளிரால் நடுங்குமாறு துவற்றுகின்ற சிலவாகிய மழையும் முகை போலும் வெள்ளிய பல்லின் நுனிகள் தம்மிற் பொரும்படி முதிர்ந்த கடிய பனி என்றும் முறையே மாலை, இரவு, துாறல், பனி ஆகியவை கூறப்படுகின்றன." வையையின் வனப்பு ஒரிடத்தில் வருணிக்கப்படுகின்றது. ” அகப்பொருள் நுட்பம் கலித்தொகை ஒர் அகப்பொருள் நூல். அகப்பொருள் செய்திகள் செறிந்த முறையில் சிறந்த வகையில் உள்ளம் கவரும் தன்மையவாய்ப் பாலைக் கலியில் கூறப்படுகின்றன. தலைவன் பிரிவைத் தாங்காது தவிக்கும் தலைவியின் உணர்ச்சி உள்ளமே பாலைக் கலிக் கவிதைகள். அழுத கண்ணும் ஆற்றாத நெஞ்சுமாய்ப் பாலைக்கலியில் தலைவி நம் நெஞ்சை ஈர்க்கின்றாள். அவள் அழகு எவரையும் அயர வைக்கும். எல்வளை74 நலம்பெறும் சுடர்நுதாள்" கிளி புரை கிளவியாய்" கொடுங்குழாய் 71. கலித்தொகை; 28 : 12-13, 30 : 1.1.12. 72. 3 J. 28 ; 16-17, 30 : 19-20, 30 : 15-16. 73. E. : 27: 1-7. --- , so 74. * - 12 : 10. 75. P. j. 12 to 14. 76. . . . . . 12; 18. 77. “ , ” 12 r 18. சே. செ. இ-17