பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/260

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258 புனை யிழாய்" ஒளியிழாய்' ஒள் நுதால்' சுடரிழாய்' நலம்பூத்த நிறம்" தொன்னலம்* மையெழில் மலருண்கண்‘* என்பவற்றாலும் அசோகன் தளிர் போன்ற நிறத்தாலும் , தீங்கதிர் மதி போன்ற திருமுகத்தாலும் , குவளை மலர்க் கண்களாலும்87 புனையப்பட்டுள்ளது. அவள் வகையெழில் வனப்பு மிகுந்தவள். இந்த உயர்ந்த தலைவியை விட்டுத் தலைவன் ஏனோ பிரிய நினைக்கின்றான். அவன் பிரிந்தால் அவள் வாழ மாட்டாள்" எனத் தோழி தலைவனுக்குச் செலவழுங்க வேண்டும் என அன்போடு பலவாறு குறிப்பிடு கின்றாள். அப்படித் தலைவன் பிரிந்தால் தலைவி எப்படிப் போவாள் என்பதைப் பாலைக்கலி உள்ளம் உருகுமாறு கூறுகின்றது. பிரிவை உணர்த்திய அளவிலே முன் கையிலிருந்து வளைகள் கழலவும், கண்ணிர் இமை 78. கலித்தொகை; 15 : 9. 79. 13 . 15 כ כ. 80 * - 34 : 12. 81. 20 : 34 נת. 82. 5 * 26 : 10. 83. 11 26 : 14. 84. ” 26 : 17. 85. .. 14 : 12. 86. 12 14 : 16. 87. † I 14:20. 88. 3- 16 : 13. 89. 1 - 1 : 13; 2 : 6; 4: 18-19.