பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/261

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

259 யினின்றும் பெருகவும், பின்னர் இமை நிறையும்படி நிற்கவும், காம நோயாலே பொலிவழிந்த நுதலினையுடைய தலைவி அயலில் உள்ளார் அறமின்றிக் கூறும் அம்பலுக்குக் கூசவும், நீ செல்லும் வழியின் வறுமையை எண்ணித் தன் எழில் நலம் இழக்கவும் புலம்பி நிற்கின்றாள்.'" பொருள் நாடிப் பிரிகின்றான் தலைவன். பூவையினும் பெரிதோ பொருள் எனத் தோழி தலைவனுக்கு எடுத் துரைக்கின்றாள். அரிய காட்டைக் கடந்து நீர் தேடும் பொருளினும் யாங்கள் உமக்குச் சிறந்தவர்கள் என்பதை நீரே அறிவீர் என்கின்றாள் தோழி. பிரிவைத் தாங்கும் ஆற்றல் தலைவிக்கு இல்லை. எனவேதான் ஒரு நாள் ஒரு பொழுது கூட்டம் இடையீடுபட நீர் பிரிவீராயின் உயிர் கொண்டு இருப்பாளோ? இராள். ஆதலால், தலைவ! நின் பொருள் வேட்கையைப் பிணித்த செலவினைத் தவிர்வாயாக' என்கின்றாள் தோழி. அப்படியும் தலைவன் செலவு மேற்கொண்டால் தலைவி என்ன ஆவாள் என்பதைப் பற்றித் தோழி உள்ளம் தைக்குமாறு கூறுகின்றாள். இவளைப் பாதுகாத்தலைக் கைவிட்டு நீ நயந்த அச்சுரத்திலே செல்வது எந்நாளிலோ அந்நாள் இவளுடைய பெறுதற்கரிய உயிரைக் கொண்டுபோம்" என்றும், நீரால் நீக்கப்பட்ட மலர் அந்த இராக்காலம் மட்டுமேனும் வாடாமல் கிடக்கும். அவ்வளவும் தலைவி உயிர் வாழாள்" என்றும் கூறுகின்றாள் தோழி. தலைவன் செல்லும் இடமெல்லாம் தானும் வரு வதாகக் கூறுகின்றாள் தலைவி. சீதை இராமனிடம் -- _ 90. கலித்தொகை: 2 : 1.5. 91. 5 : 4 o 3-5. 92. H. P. 3 : 23-25. 93. 3 * 4. o 18-19. 94. 15 4 : 15.