பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/262

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*

  • 260

சொன்னதைப்போல் இருக்கின்றது இந்தச் சித்திரத்தாள் பேச்சு. அந்த வழியில் வரும் துன்பத்திற்கு எம்மையும் துணையாகக் கொண்டு நும்மொடு போதலை ஆராயின் அதுவல்லது எமக்கு வேறோர் இன்பமும் உண்டோ என்கிறாள்.'" பொருள் கருதிப் போக விரும்பும் தலைவனைப் பார்த்துத் தோழி நீ கருதின தேயத்துச் சென்று முயன்று தேடும் பொருள் இன்பந் தருதலே அன்றி இவள் இனிய உயிரைத் தருதலைச் செய்யுமோ என்கின்றாள்.98 வினை வெஃகி நீ செலின் விடும் இவள் உயிர் என்று தலைவியைப் பற்றிக் குறிப்பிட்டதும் வினைமேற் சேறலை விட்டுவிட்டான் தலைவன். கழன்ற வளைகள் கையைக் கவ்வுமாக என்கிறாள் தலைவியிடம் தோழி, இந்தக் களிப்பான செய்தியைக் கூறி! 97 உடன் வருவேன் என்று கூறிய தலைவியிடம் தலைவன் உன் அழகில் சிவந்த அடிகள் கறுத்துப் போகாவோ.98 அரிமாவின் முழக்கம் கேட்டு அஞ்சுவை அல்லையோ?99 இடைச்சுரப் பெருங்காற்று எழில் நலத்தை வாட்டும் அல்லவோ 0 0 என்கின்றான். இதிலிருந்து தலைவியின் மென்மை புலப்படுகின்றது. இடைச்சுரக்காடு இன்னல் மிக்கது என்று கூறியதற்குக் காரணம் அவளை இங்கேயே விட்டு நீங்கவேண்டும் என்பதால் அல்ல; அதைக் கேட்டு அவள் அதைக் கேட்டு நடுங்கும் அழகினைக் காணவேண்டும் என்பதற்காகத் 95. கலித்தொகை; 5 : 9-11. 96. 15 6 : 20–21. 97. I. I. 9 : 21. 98. 11 - 12: 11-13. 99. 11 . 12 : 17. 100. 12:21 תפ.