பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/263

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

261 தான் என்று தலைவன் தலைவியிடம் நகைச்சுவை யோடு விளையாடுகின்றான். ! இளமையும் காமமுமே இன்பம்; இவைபெற்றார் வேறு வளம் எது பெறவேண்டும் என்றும், கள வொழுக்கம் நிகழ்ந்த காலத்தில் கூறியதெல்லாம் பொய் யாய் இருப்பதை யான் அறிய மாட்டேன்; வீட்டார் அலர் துாற்ற வெளியே காட்டைக் கடந்து செல்லத் துணிந்து விட்டாய்; நீ நல்ல மகன் அல்லன் என்பதை உறுதியாக அறிந்தேன் என்றும் தோழி கூறிப் பார்க்கின்றாள். போகும் வழியில் உன்னைப் போகவிடாமல் தடுக்கும் ஒர் அவலச் செய்தி. தலைவி இறந்தாள் என்பதே அந்தத் தாங்கொணாத் துன்பம் எனச் சாவினை நுட்பமாகக் கூறிப் பார்க்கின்றாள்.'" நீர் செல்லும் வழியில் ஏற்றின் பின் நீங்காமல் திரியும் பிணையைக் காண்பது இலையோ? என்னையும் உடன் அழைத்துச் செல்க என்று மன்றாடிப் பார்க்கின்றாள். ஆனால் தலைவனோ வினையே ஆடவர்க்கு உயிரே என்றும், மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிர் என்றும் கோட்பாடு கொண்டவன் ஆதலால் எவ்வாறோ வினைமேற் சென்று விடுகின்றான். பிரிவுக் காலத்தில் பேதை நெஞ்சம் எவ்வாறெல் லாமோ பிதற்றுகின்றது. தண்ணிர் குடிக்கப்பட்ட 101. கலித்தொகை 12:25-27. 102. 7-8 ! 17 נג. 103. o 18 : 1-6. 104. 11 18 : 11-13. 105. 21-23 : 19 נג.