பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/265

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

263 பிணைக்குத் தன் நிழலைத் தந்து மகிழும் கலைமான் வாழும் அன்பினை என்றும் புனையப்படுகின்றது. சென்று விட்டவினை பற்றியே எப்போதும் அவளுக்குச் சிந்தனை. சேயார்கட் சென்ற என் நெஞ்சு தொழநிலை நெகிழ்ந்தார்கண் தோயும் என் ஆருயிர் என்பதால் இதனை அறியலாம். காமநோய் எத்தன்மையது என்பது பற்றிக் கலித் .ெ தா ைக கூறுகின்றது. நினைக்கும்பொழுதெல்லாம் நெஞ்சழியும் வருத்தத்தையுடையது காமநோய். ே தனக்கு மட்டுமே காம நோய் துன்பந் தரும் என்று கருதும் தலைவிக்குத் தலைவரும் இந்நோய் தாங்க மாட்டார் எனத் தோழி உணர்த்தும் நுட்பம் உன்னி மகிழ்த் தக்கது. | 17 பாலைக் கலியில் உடன் போக்குப் பற்றிய செய்தியும் இடம் பெற்றுள்ளது. தலைவனும் தலைவியும் கூடிச் சென்றுவிட்டனர் என்பதறிந்து அவர்களைத் தேடிச் செல்லும் செவிலியின் கூற்று நயமிக்கது. அவளது புலம்பலுக்கு மலையிலே பிறந்தாலும் சந்தனம் அதற்கு என்ன பயன் தரும் சி. நீரிளே பிறந்தாலும் முத்து நீருக்கு என்ன செய்யும்'. யாழிலே பிறந்தாலும் இசை அதற்கு 113. கலித்தொகை; 11 : 14.17. 114. E. H. 28 : 10. 115. 15 28 : 18. 116. 22 :34 תת. 117. : 1 27 : 22–23. 118. # I 8 : 6-8. 119. II. 8 : 12-14. 120. 7 : 8 : 15-17.