பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/267

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

265 தான்? என் நெஞ்சு மலையிடத்தே போனவருடைய வார்த்தையினாலே தோன்றிய காமத் தீயாலே என் னுடைய முலையெல்லாம் காந்தா நிற்கும்'. தலைவன் குறித்த காலத்தே வருவான் என்பதைத் தோழி நயம்படச் சாற்றுகின்றாள். என் நெஞ்சு அவர் குறித்த நாள் வந்து நின் அழகைக் கெடுத்தலும் உண் டென்றும் கருத்து. நூற் கேள்வியினையுடைய அந்தணர் செலுத்தும் யாகத்திடத்துப் புகைபோல நெட்டுயிர்ப்புக் கொள்ளும் 13". தலைவியின் காதல் எத்தன்மையதாம்? மறத்தல் அரிதாகிய வேட்கையையுடைய காதல்' என்கின்றது பாடல். பொற்குடத்திற்குப் பொட்டிட்டது போன்றது இது. உவமைகள் ஒரு பொருளைச் சுவையுடன் உணர்த்தவல்லது உவமை. உவமை இலக்கியத்தின் பேரழகு. உவமை கள் புலவர்களின் நுண்ணிய நோக்கினையும் ஒவிய உணர் வினையும் புலப்படுத்த வல்லது ' என்கிறார் டாக்டர் மு. வ. சங்க இலக்கியங்கள் சிறப்பான உவமைகளைப் பொருத்தமாகப் பெற்றுள்ளதைக் காணலாம். பாலைக் கலியில் உவமைத் திறன், படிக்க இன்பம் ஊட்டுவதாகவும், எண்ணிட விருந்து நல்குவதாகவும் அமைந்துள்ளது. தலைவியின் கண்ணைப் பற்றிப் பல இடங்களில் உவமை சொல்லப்பட்டிருக்கின்றது. இரண்டு கண்களுக்கு அழகிய நீலநிறமான இரண்டாகிய மலர்கள் ஒப்புமை 128. கலித்தொகை: 35 : 18-21. 129. 15 35 : 16-17. 130. 22-24 :35 גס. 131. 5 : 1 : 9. 132. கலைக்களஞ்சியம்; ஐந்தாம் தொகுதி. பக். 480.