பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/269

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

267 தளிரை யொக்கும் எனப்படுகிறது. . மாமை நிறம் எனப் பொதுவாய்ச் சொல்லுவதிலும் குறிப்பிட்டுச் சொல்வது சிறப்பாக இருக்கிறது. இத்துணைச் சிறந்த தலைவியின் எழில் நலம் எப்படி அழிகின்றது என்பதைச் சில பாடல்கள் இயம்புகின்றன. நிறைமதி நாடோறும் ஒழுகத் தேய்வதுபோல் தலைவியின் அழகுநலம் தலைவன் பிரிவிலிருந்து நாடோறும் கெடுகின்றதாம். 44 தலைவியை விட்டுத் தலைவன் நீங்கினால் நீண்ட நிழலினின்ற தளிர் போல அவள் -ElէՔ(3, வெளுத்துவிடுகின்றதாம். ' தலைவன் அளித்தலை நீங்குங் காலத்துத் தலைவியின் அழகு வானந் துளிமாறு பொழுது இவ்வுலகங் கெடுமாறு போலக் கெடும் என்கிறது ஒரு பாடல். . பசலை வந்து பற்றுகின்றது தலைவியை. பாலைக்கலி இதைப் பற்றிப் பொலிவுறப் பகர்கின்றது. மறுவற்ற மதிமேல் முகில் படருந் தன்மைபோல் மறுவிலா ஒளியுடைய முகத்தே பசப்புப் பரவுமாம். பிறிதோ ரிடத்தில், அவளுடைய திருமுகம் இனிய கதிர்களுடைய திங்களை ஒக்கும்; அந்த முகத்தில் பாம்பு சேர்ந்த திங்களைப் போலப் பசப்புப் பரந்திடும் எனப்படு: கின்றது. ே பாலை வந்தவுடன் பருவ அழகு கெடும் அல்லவா? வளைகள் முன் கையினின்றும் கழன்று ஒடுகின்றனவாம்!" அசைகின்ற இதழினையுடைய கோடல் பூ ஊழ்த்து விழுவது போல் அழகிய ஒளி பொருந்தின வளைகள் இறையினின்றும் 141. கலித்தொகை; 14 : 12. 142. 5 : 16 : 7-8. 143. In 1 19 : 17. 144. H. H. 24 : 28-29. 145. * , 6 : 7-8. 146. 5 * 14 : 16-17.