பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/270

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

268 கழன்று விழுமாம். 4 செல்வமுள்ள காலத்துச் சேர்ந் திருந்து அவருடைய செல்வத்தை நுகர்ந்து அது நீங்கிய வுடன் அவர்க்கு ஒன்றை உதவுதல் இல்லாத அறிவிலா ருடைய உறவுபோல் தலைவர் பிரியாதிருக்கும் காலத்தில் கையில் செறிந்தும், பிரிந்த போழ்து தோள் மெலிகை யினாலே கழன்றும் விளங்கும் இயல்பின வளைகள் என்கின்றது ஒரு பாடல். சுற்றங் கெட வாழ்பவன் ஆக்கம் பொலிவு அழியுமாறு போலப் பொலிவிழந்து தோள்கள் வளை கழன்று விடும் என்கிறது பிறிதோ ரிடத்தே. 49 நிலை கெட்டால் நெஞ்சம் புலம்பு மன்றோ! தலைவி நெட்டுயிர்க்கின்றாள். அந்த நெட்டுயிர்ப்பு அந்தணர் செலுத்தும் யாகத்திடத்துத் தோன்றும் புகை போன்று விளங்குகின்றதாம். தலைவியின் நடுக்கம் அச்சம் அமைந்த பகைவரின் நடுக்கத்தை ஒத்திருக்கின்றதாம். தலைவியைப் பற்றிய ஓர் ஓவியமே பாலைக் கலியில் தீட்டப்பட்டுள்ளது. அந்த அருமை ஒவியத்திற்குப் பெருமை சேர்ப்பது போல அவளுடைய கற்பு பற்றிக் கூறப்படு கின்றது. அருந்ததிபோல் தொழுது வணங்கத் தக்க கற்பினள் தலைவி என்கிறது பாடல். 2 தலைவன் பிரிந்து சென்று விட்டான். அந்த ஏக்கத்தில் தலைவி எழில் குன்றிக் கிடக்கின்றாள். தலைவியின் தனிமை விழா நடத்த மறுநாள் அந்த இடம் வெற்றெனக் 147. கலித்தொகை; 6 : 15.16. 148. + 3. 24 : 17–20. 149. 5 * 23 : 18-19. 150. > y 35 : 25-26. 151. , * 29 ; 21. 152. † :) 1 : 21.