பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/272

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270 காட்டிலிருந்து வேழம் தன் கிளையுடன் தப்பிச் செல்லும் கொடுமை போலவும் பாலை நிலம் உவமிக்கப் படுகின்றது. தலைவன் செலவழங்கிய தன்மைக்குச் சில உவமைகள் தரப்படுகின்றன. பரிக் கோலால் குத்தவும் தன் நெறியில் இல்லாத செலவு கடிய களிற்று ஒருத்தல் மெல்லிய யாழோசையின் எல்லையிலே தங்கினாற்போல, அன்புற்றுத் தாழ்ந்து குற்றேவல் மகளாகிய தோழி தன் கூற்றின் எல்லையிலே தங்கிப் போகாது ஒழிந்தார் என்பதும், உண்மை கூறிக் கழறும் கேளிரைப் போல, தலைவன் போக்கைத் தடுப்பன அவன் செல்லும் காடு என்பதும் ,ே யாக்கையின் கண்ணே மருத்துவன் நுகர்வித்த மருந்து போல, தோழி கூறிய சொல் நல்ல மருந்தாகித் தலைவன் போக்கைத் தவிர்த்தது என்பதும் ஆகும்.' தலைவன் குறித்த காலத்தில் திரும்பி வருவான் என்னும் நம்பிக்கையோடு இருக்கும் தலைவிக்கு அவனது விரைந்த செலவு கண் உறுகின்ற வருத்தத்தைக் கை நீக்குவது போலாம் என்பதும் ஆகும். இளமை நிலையாமை, காலம் நிலையாமை இரண்டும் அழகிய உவமைகளால் விளக்கப்படுகின்றன. ஆற்று நீர் கழிந்தாற்போல என்றும் 98, நீர் நிறைந்த தடம் அந்நீர் நாள்தோறும் குறைவதைப் போலவும் என்று இளமை நிலையாமைக்கும் முற்றின தாமரை முகைக்குக் கூற்ற 16. கலித்தொகை 24:1-11. 162. 26-97 : 1 ל ת 163. 21-22 : 2 נג 164. 16:18-20 ג ב. 165. 33 : 23-24. 166. o 19 : 13. 167. > * , 16 : 15-16.