பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/273

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

271 மாகிய அலர்ச்சி அதன் குறைவிற்குக் காரணமானாற் போல என்பது கால நிலையாமைக்கும் உவமிக்கப்படுகின்றன. 68 பொருள் நிலையாமைக்கு நரம்பு அறுந்து போகும் யாழும், மனம் மாறும் திருமகளும், உயிரைக் கொள்ளும் அரசும் உவமைகளாகக் காட்டப்படுகின்றன. 69 பாலைக்கலியில் விலங்குகளைப் பற்றிய குறிப்புகள் வருகின்றன. மானின் உடம்பில் உள்ள புள்ளிகள் பொரி மலர்ந்தாற் போன்றவை என்றும் 19, யானையின் அடிகள் உரல் போன்றவை என்றும்', யானையின் மருப்பு பால் போன்ற வெண்மையுடையது என்றும் குறிக்கப்படு கின்றன.17 ) பாலைநிலத்து மறவர்களுடைய பார்வை புலி நோக்குப் போன்றதென்றும் 18, அவர்களுடைய வில்லில் எழும் நாண் ஒலி, சிங்கம் இடித்தாற் போன்றதென்றும் 14, அவர்கள் முகத்தில் சுருண்டிருக்கும் தாடி, ஆண் மானி னுடைய திருகி முறுக்குண்ட கொம்பு போன்றது என்றும் உவமிக்கப்படுகின்றன. . இயற்கை வருணனை பாலைக் கலியில் எழிலுறத் தீட்டப்பட்டுள்ளது. படை வலி இல்லாத அரசனுடைய நாட்டிலே பகையரசன் படை வந்துவிடுமாறு போல தலைவன் இல்லாத தலைவியிடம் இளவேனில் வந்த தென்று உவமிக்கப்படுகின்றது. 168. கலித்தொகை 16 : 21-22. 169. 14 : 11 : 7 ל כ170. 3 : 12 : 3. 171. 3 : 12 : 6. 172. H. : 20 : 1 173. 1 : 3 ג. ב 174. 5 : 14 : 1. 175. 55 14: 5-6. 176. • 26 : 7-8.