பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/274

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272 ஆற்றிடைத் தோன்றும் அறல் மணலுக்கு அருமையான உவமைகள் காட்டப்படுகின்றன. கரையிலிருந்து விழுந்த, தாலும் தளிராலும் நிரம்பிய ஆற்று மணலுக்குக் காதலரைக் கூடிய தலைவியின் கூந்தலும் 77, வளையினை யுடைய இளையோர் இழைத்த வண்டல் பாவையும் பூவும் கலந்து கிடந்தமையும் , அம்மணலில் ஒழுகும் நீருக்கு மகளிரின் ஐம்பால் கூந்தலும் உவமை காட்டப் பெறு. கின்றன. மணலிலே பல நிறத்தையுடைய வேங்கைப் பூக்களும் விழுந்து கிடந்தமைக்கு ஐம்பாலில் கிடந்த அணியும் பொன் மாலையும் உவமிக்கப்படுகின்றன. 80 பொருள்களின் அசையா நிலையில் புலனாகும் அழகைப் புனைந்து பாராட்டுதல் போலவே அசையும் நிலையில் அவற்றின் அசைவைப் புனைந்து பாடுதலும் உண்டு. ஈரமற்ற நிலத்தை உழுகின்ற கலப்பைகள் போல யானைகள் தங்கள் கொம்புகளை ஊன்றிக் கையை நிமிர்த்தி நிலத்தின்மேல் கிடக்கின்றன என்பதும் ! செய்தற்கரிய தவங்களைச் செய்தவர்கள் குறைவற நுகரும் நுகர்ச்சி போல அரும்புகள் விரிந்தமையாத கொம்புகள் தோறும் தாம் விரும்பும் தாதைப் பொருந்தி உண்டு விரும்பி ஆர்க்கும் வண்டுகள் என்பதும் அவ்வகையின. மணியின் ஒளியைப் போன்ற ஐவகைக் கூந்தல், என்றும், குளத்தில் மலர்ந்த தாமரை அரும்பு போன்ற இளமுலை என்றும், பொற்றகடு போன்ற சுணங்கு என்றும் 83 அனிச்சப் பூப் போன்ற மென்மையிலே பழகிய அடிகள் 177. கலித்தொகை; 26 : 5.6. 178. 5. i 28 : 5. 179. 6 : 28 כ כ. 180. 5 : 31 : 3-5. 181. * † 7 : 4-5. 182. In 1 29 : 1-3 183. 13-19 : 21 תת.