பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/275

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

273 கல்லைத் தீண்டினால் தோன்றும் தன்மை, தாமரைப் பூவினது அழகிய இதழ்கள் இங்குலிகம் தோய்ந்தாம் போன்று விளங்கும் என்றும் தலைவியின் உறுப்புகள் புனையப்படுகின்றன. குறித்த காலத்தில் வருவேன் என்று கூறிச் செல்லு கின்றான் தலைவன். அவன் கூறிய மொழியிடத்து உயிராகிய உண்மை கெடமாட்டார் என்பது, சித்திரம் எழுதுகின்றவன் உயிர்ப்புக் கொடுத்த பாவை, தான் அழியுமளவும் அக்குறிப்பு நிற்குமென உவமிக்கப்படு கின்றது. தலைவன் சொன்ன சொல் தவற மாட்டான் என்பதற்குப் பாண்டியனுடைய வாய்மை, உவமிக்கப்படு படுகின்றது. ே பூக்கள் மலரும் மலர்ச்சிக்குப் பல உவமைகள் கையாளப்படுகின்றன. தாமரையின் புதிய பூ, புணர்ந்தவர் முகம் போலப் பொலிவுறுகின்றது என்றும் 7, சோம்பல் இல்லாதவன் செல்வம் பெருகுவது போல மரங்களில் பூக்கள் மிகுகின்றன என்றும் , கரிய நிறத்தையுடையவள் மேனி போலத் தளிர்கள் தோன்றுகின்றனவென்றும் , அத்தளிரின் மேலே விழுகின்ற தாது அந்நிறத்தில் பரந்த கணங்கு போன்றும் 99, தாதுகளை உண்ண வருகின்ற 184. கலித்தொகை; 12 : 11-12. 185. 5 : 21 : 5-6. 186. 24-25 : 3 ג כ. 187. #: 30 : 5. 188. * > 34 : 1. 189. * 34 : 3: 190, o: 34 : 3-4. சே. செ. இ.18