பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/277

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. அகங்ானுாறு எட்டுத் தொகையுள் ஒன்றான இது மற்ற ஏழு தொகை நூல்களை விட அளவால் பெரியதாகவும் அகப்பொருள் பற்றிய தொகை நூல்களுள் சிறந்ததாகவும் அதனாலேயே அகம் என்ற பெயரைப் பெற்றதாகவும் அளவால் குறுகிய அடிகளை உடைய நானுாறு பாட்டுகளைக் கொண்ட குறுந்தொகைக்கு மாறாகப் பதின்மூன்று முதல் முப்பத் தோரடி வரையில் கொண்ட பாட்டுகள் நானுாறைக் கொண்டதால் நெடுந்தொகை என்னும் பெயரை உடைய தாகவும் அகநானூறு விளங்குகின்றது. இந்நூலைத் தொகுத்தவர் மதுரை உப்பூரிகுடிகிழார் மகன் உருத்திர சன்மன். தொகுப்பித்தவன் புலமை நிரம்பிய - அக நானுாற்றிலே ஒரு பாடலைப் பாடியுள்ள பாண்டிய மன்னனாகிய உக்கிரப்பெருவழுதி ஆவன். கடவுள் வாழ்த்துச் செய்யுளைத் தவிர்த்து நானுாறு பாடல்களைக் கொண்ட இந்நூலில் முதல் நூற்று இருபது பாடல்கள் களிற்றியானை நிரை என்றும், அடுத்த நூற்று எண்பது பாடல்கள் கொண்ட பகுதி மணிமிடை பவளம் என்றும், இறுதி நூறு பாடல்களைக் கொண்ட பகுதி நித்திலக் கோவை என்றும் வழங்கும். இவ்வொவ்வொரு பகுதியும் தனி நூல் போலவே உரையாசிரியர்களால் எடுத்துரைத்து மேற்கோள் காட்டப் பெறுகின்றது. அதனாலேயே அகநானூறு மிகச் சிறப்பாகப் போற்றிக் கற்கப்பட்டது என்னும் உண்மை விளங்குகிறது. பொருட் சிறப்புக் காரணமாகக் களிற்றியானை நிரை என்ற பெயரும், செய்யுளும் பொருளும் ஒத்த அமைப்பால்

  • - . - * . - * * - * c. o 1, டாக்டர் மு. வ; கலைக்களஞ்சியம்: முதல்

தொகுதி, பக். 9 - - - - -