பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/278

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276 நித்திலக்கோவை என்ற பெயரும் வழங்கியதாகக் காரணம் கூறப்படும். ஆயினும் அறிஞர் ஒருவர் இவ்வரையறையின் இயைபு இன்ன என்பது நன்கு புலனாதல் இல்லை என்பர்.2 மேலும் பாலை, குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் ஆகிய ஐந்து திணைகளும் இதில் ஒரு முறை பற்றி அமைக்கப் பட்டுள்ள பொருத்தம் இந்நூலின் பிறிதொரு சிறப்பாகும். ஒற்றைப்படை எண்களையுடைய பாடல்கள் பாலைத் திணை பற்றியனவாகும். இரண்டும் எட்டுமாக வரும் எண்கள் குறிஞ்சித் திணை பற்றிய பாடல்களாக உள்ளன. நான்கு பதினான்கு என வருவன முல்லைத் திணைக் குரியன. ஆறு பதினாறு என ஆறாவது எண்ணாக உள்ளவை மருதத்திணை பற்றிய பாடல்களாகும். பத்து இருபது என்று பத்துப்பத்தான எண்கள் நெய்தல் திணைக்குரிய பாடல்களாகும். இவ்வகையான முறையில் ஐந்திணை அமைப்புத் தொகைநூல்களில் இந்நூலுக்கு மட்டுமே அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும். அகப்பொருள் பற்றி எழுந்த இந்நூலில் முதற் பொருள் கருப்பொருள் உரிப் பொருள் என்ற மூன்றும் விளக்கமாகக் கூறப்பட்டுள்ளன. அகப் பொருள் நூலாயினும் இந்நூற் கண் வரலாற்றுக் குறிப்புகள் மிகப் பலவாக இடம் பெற்றுள்ளன. இந்நூல்களைப் பாடிய புலவர்கள் நூற்று நாற்பத்தைவராவர். மூன்று பாடல்களைப் பாடிய ஆசிரியர் பெயர் காணப்படவில்லை. ஏனைய பாடல் களைப் பாடியோர் தொகை நூற்றுநாற்பத்திரண்டு. - காதலர்களின் அகனமர்ந்த காதல் உணர்ச்சி, தூய்மை யும் தியாகப் பண்பும் பொருந்திய அவர்கள் வாழ்க்கை, தலைவனின் கடமை தேரும் நெஞ்சம், தலைவன் மாட்டுக் கொண்ட தலைவி அன்பின் ஆழம், தலைவனின் பொருள் , o, 2. இரா. வேங்கடாசலம் பிள்ளை: அகநானூற்றுச் -- " சொற்பொழிவுகள்; தலைமை உரை, பக். 9. 3. அகநானூறு 114, 117.169.