பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 மூன்றாம் பத்தில் பாலைக்கெளதமனார் பல்யானைச் செல்கெழு குட்டுவன் நாட்டை, யாண்டு பிழைப் பறியாது பயமழை சுரங்து நோயின் மாந்தர்க் கூழி யாக ! என்று பாராட்டுகின்றார். மேலும், கடலுங் கானமும் பலபய முதவ -மூன்றாம்பத்து; 2:6. என்றும் பாராட்டியுள்ளமையால் பல்வளங்களும் நிரம்பிய நாடு பல்யானைச் செல்கெழு குட்டுவன் நாடு என்பது பெறப்படுகிறது. அவன் காத்தோம்பிய நாட்டில் வயல் வளம் சிறக்கப் பெயல்வளம் சிறந்து பேரா யாணர் பெரிதும் நிகழ்கின்றது என்பதும் பின்வரும் பகுதி கொண்டு அறியலாம். வயங்குகதிர் விரிந்து வானக ஞ் சுடர்வர வறிதுவடக் கிறைஞ்சிய சீர்சால் வெள்ளி பயங்கெழு பொழுதோ டாகிய நிற்பக் கலிழுங் கருவியொடு கையுற வணங்கி மன்னுயிர் புரை இய வலனேர் பிரங்கும் கொண்டற் றண்டுளிக் கமஞ்சூன் மாமழை காரெதிர் பருவ மறப்பினும் பேரா யாணர்த்தால் வாழ்கனிற் வளமே -மூன்றாம்பத்து; 4:23-30 மேலும், செந்நீர்ப் பூசலல்லது வெம்மை (மூன்றாம் பத்து, 18:13-14) அரிதான நாடாகச் சேரநாடு துலங்கு கின்றது. சேரநாட்டின் நெய்தல் வளத்தினை ஆறாம் பத்து அழகுற எடுத்து மொழிகின்றது. வளைநரலும் பனிப் பெளவத்து மருங்கில் வண்பினி யவிழ்ந்த கண் போல் நெய்தல் கமழ்வதாகக் காக்கைபாடினியார் 31. பதிற்றுப்பத்து; மூன்றாம்பத்து: 1:30-31.