பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/281

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

279. மிகுந்த சோலைகள் நிரம்பியது என்றும்' குறிப்பிடு, கின்றார். ஆதிமந்தி என்பவள் சோழ அரசன் மகள். ஆட்டனத்தி என்னும் சேர அரசனை மணந்தாள் அவள். காவிரிநீர் வெள்ளத்தில் அத்தி அடித்துச் செல்லப்பட்டான். அவனைக் காணாமையால் துன்புற்றுக்' குழன்ற மயிரினை உடைய அத்தியைக் கண்டீரோ என அவன் காதலி ஆதிமந்தி அலறி, அறிவு திரிந்து மயங்கி, நாடுதோறும் ஊர்தோறும் சென்று என் தலைவனைக் கடல் கொண்டது போலும், புனல் கொண்டு ஒளித்தது போலுமெனக் கண்ணிர் விட்டுப் புலம்பிப் புனலின்கண் விரும்பி ஆடக் காவிரி கவர்ந்து கொண்ட ஆட்டனத்தியைத் தேடினாள். அவன் ஆடிய அழகினைக் கண்டு மயங்கியே காவிரி கவர்ந்து கொண்டதாகக் கற்பனைச் சுவையுடன் மொழிகின்றார் பரணர். கழார் என்னுமிடத்திலுள்ள துறையிடத்து நடந்த விழாவில் கரிகாலன் தன் சுற்றத்துடன் காண ஆட்டனத்தி ஆடினான் என்றும், காவிரி விழுங்கிய அவனைக் கடலிலிருந்து மருதி என்பாள் மீட்டுத் திசை தோறும் தேடியலைந்த ஆதிமந்தியிடம் கொடுத்தாள் என்றும் பரணர் வரலாற்றை முழுமைப் படுத்துகின்றார்.' சேரனுடைய கொல்லி மலையைப் பற்றியும், அம்மலையில் தேவதச்சனால் மலையுச்சியில் அழகொழுக

10. அகநானுாறு; 15 :5-6, 11. 12-15 : 45 : ת. 12. 5 : 76 : 6.13. 13. 2 : 135 : 4-6. 14. H. : 236 : 14-21. 15. os- 376 : 3-11. 16. H. : 396 : 11-15. 17. 7 o’ 222 : 5-12.