பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/282

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

280 எழுதப்பட்ட பாவையைப் பற்றியும், அப் பாவை அண்டினாரைக் கொல்லும் தன்மையைப் பற்றியும்' பரணர் முதலான புலவர்கள் பாடியுள்ளனர். தமிழக மன்னர்களைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் நிரம்ப இடம் பெற்றுள்ளன. சேர மன்னர்களைப் பற்றியன அறுபத்து நான்கு பாடல்கள் ஆகும். வானவரம்பன் என்பவன் கடற்போரில் வென்றவன். போர் முனையில் அரணைக் கலக்கும் வலியவன் என்பதும் அவனுடைய ஊர் வெளியம் என்பதும்20, அவனுடைய வளமான நாட்டிற்கு அப்பால் கொடிய வெம்மையான காடு உள்ளது என்பதும் குறிக்கப்படு கின்றன. திண்ணிய தேர்களை உடைய பொறையன் என்பவன் தொண்டி நகருக்கு உரியவன். யானைப்படை யுடைய அவனுக்கு உரியது கொல்லிமலை 28. பசும்பூண்களை அணிந்தவன், பகைவரது தேயம் பாழ்பட அழிப்பவன், பகைவரால் அணுகுதற்கு அரிய படையுடையவன்' என்பன உணர்த்தப்படுகின்றன. மாந்தரம் பொறையன் கடுங்கோ என்பவன் புலவர் புகழுமாறு வாரி வழங்கும் வள்ளல் என்பதும், அளத்தற்கு அரிய சேனையினை உடையவன் என்பதும், அவனைப் 18. அகநானூறு, 62 : 12-16. 303 : 3.6. 338 : 1.2.14. 209 : 15-17. 213 : 15-17. 19. 15-19 : 45 5 כ. 20. 5.7 : 359 ג כ. 21. 15-18 : 389 פל. 22. 5-5 60 : 7. 23. 5 12-14 : 338 ,12-13 : 62 ל 24. > 5 303 : 3-6. 25. 12-14 : 338 נג.