பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/283

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

281 பாடிச் சென்றோர், வறியோர் கலம் எப்போதும் நிறை -வுற்று மகிழும் என்பதும் பரணர் குறிக்கும் செய்தி களாகும். ே குட்டுவன் என்பவன் பசி என்பதனையே அறியாத மருதநிலத்து ஊர்கள் கொண்ட குடநாட்டுக்கு உரியவன்." படை மிகுந்த அவனைப் பாரில் எதிர்க்க ஆளில்லாததால் கடல் பிறக்கோட்டி வெற்றி காண்கிறான். அவனது பாசறையில் பல மொழி மறவரும் இருந்தனர் என்பன அறியப்படும்.28 பிடரி மயிர் கொய்யப் பெற்ற குதிரைகளும், நல்ல தேர் களும் உடைய குட்டுவன் கழுமலம் என்னும் ஊர்க்கும் உரியவன். நீண்ட மருப்புகளை உடைய யானைப் படை மிகுந்த அவன் தொண்டித் துறைமுகத்திற்கும்’ , மாந்தை என்னும் ஊர்க்கும் உரியவன். ஆரிய மன்னர்கள் அலறுமாறு அவர்களைத் தாக்கிப் பெரிய இமயமலையின் மீது வளைந்த விற்பொறியைப் பதித்து, கொடிய சினம் பொருந்திய பகை வேந்தரைப் பிணித்துவந்த சேரனும் அவனே.82 சிலப்பதிகாரம் பகரும் சேரன் செங்குட்டுவன் இவனே. ஈகையாகிய கடனை ஏற்றுக்கொண்ட கோட்ட மில்லாத நெஞ்சினை உடைய உதியன் என்பவன் அட்டில் அறை ஒயாது ஒலி நிறைந்ததாயிருக்கும். இந்த உதியன், பெருஞ்சோற்று உதியன் சேரலாதனே என்பதற்கு இவன் 26. அகநானூறு: 142 : 1-6. 27. 12-17 : 91 גוג. 28. 5 212 : 12–21. 29. 5 : 270 : 7-11. 30. 290 : 12-14. 31. H. : 376 : 17-18. 32. E. : 396 : 16-19.