பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/284

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

282 சிறப்பாகச் சோறு ஆக்கிப் படைக்கும் பண்பு குறிக்கப்படுவ திலிருந்து உணரலாம்.32 அ சேரலாதன் என்பவன் கடலிடை இருந்த பகைவர்களை வென்று அவர்தம் காவல் மரத் தினை வெட்டி,83 இமயத்தில் முன்னோரை ஒப்ப வில் இலச்சினையைப் பொறித்து, மாந்தை என்னும் தனது நகரத்தில் பகைவர் திறை செலுத்த அதனைக் குவித்து வைத்த பெருநிதியன்; நிலந்தின்னவிட்ட நிதியன் என் இறார் மாமூலனார்.34 இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் இவனாகவும் இருக்கலாம். - யானைப் படையும் தேர்ப்படையும் கொண்ட கோதை என்பான் கருவூருக்கு (வஞ்சி) உரியவன். ஆன் பொருனை ஆறு அவ்வூரினை ஒட்டிப் பாய்கின்றது." அவன் வஞ்சியென்னும் கருவூரை மிகுந்த விழிப்புடன் பாதுகாக் கின்றான்.86 களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல் பெருந் துறை என்னுமிடத்தில், முன்பு இழந்திருந்த நாட்டை நன்னன் என்பவனுடன் பொருது மீட்டான். குதிரைப் படை கொண்ட வானவன் எனபவனைத் தொலைவி லிருந்து கூத்தர் காண வருவர். பகைவருடன் போரிட்டு அவர்களுடைய அரண்களை அழிப்பதில் வென்றி மிக்கவன் வானவன் என்னும் சேர மன்னன்.” பாண்டிய மன்னர்கள் தலையாலங்கானம் என்னும் ஊரிடத்தே பாண்டியன் நெடுஞ்செழியன், கூடி வந்து எதிர்த்த சேரன், சோழன், 32.அ அகநானூறு; 168 : 6-8. 33. 347 ,3-4 ; ,127 נג t 3-5. 34. 3-10 : 127 נג. 35. | || 93 : 19-21. 36. 5 * 263 : 11-13. 37. * 5 199:18-23. 38. 1 9-1 :; 309 נפ. 39. - i. 381 ; 13-17.