பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/285

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*283 திதியன், எழினி, எருமையூரன், இருங்கோ வேண்மான் பொருநன் ஆகிய எழுவரையும் ஒரு பகலிலே வென்று வலியழித்து அவர்களுடைய முரசையும் வெண்குடையையும் கைப்பற்றினான். 40 பசும்பூண் பாண்டியன் என்பவன் அறத்தினைக் கொண்ட செங்கோலாட்சியும், பகைவர் திறன் அழிக்கும் பேராற்றலும், பலரும் புகழும் திருவும் கொண்டு விளங்கினான். பகைவர்களுடைய அரண்கள் பலவற்றை வென்றவன். மதுரை மாநகரில் நாளங்காடி சிறப்புற விளங்குபவன் வழுதி என்னும் பாண்டியன்." சோழர்கள் கழார் என்னும் துறையின்கண் ஆட்டனத்தி ஆடிய ஆட்டத்தை விரும்பித் தன்னுடைய சுற்றத்துடன் அதனைக் கண்ணுற்றான் கரிகாலன்: என்கிறார் பரணர். சேர மன்னர்களுக்குரிய சிறப்புகள் சில குறிப்பிடப்படுகின்றன. குடந்தை நகரில் நிதியைச் சேர்த்து வைத்திருந்தனர். ' அவர்களுடைய உறந்தை நகரில் அறங்கூறும் அவையம் (நீதி மன்றம்) இருந்தது. காவிரி ஆறு சோழர்களுக் குரியது. போரில் வல்ல சோழர்களுடையது பண்டங்கள் குவிந்து கிடக்கும் பாக்கம் என்னும் கடற்கரை ஊர். ஆநிரை கவரும் வீரர்கள் தலைவன் அச்சோழன். 7. குறுநில மன்னர்கள் நன்னன் என்பவனைப் பற்றிப் பல செய்திகள் நவிலப் படுகின்றன. நன்னன் என இரண்டு மூன்று பேர் இருந்த 40. அகநானூறு 36 : 12-33, 209 : 3.6. 41. 1-5 : 338 נת. 42. 3 * 93 : 8-11. 43. † : 376 : 4-5. 44. .13-15 : 60 גל. 45. • 93 : 1-5. 46. 5 : 213 : 21-24. 47. 5 : 338 : 17-20.