பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/286

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

284 தாகத் தெரிகின்றது. பாழி என்னும் ஊருக்குத் தலைவன் என ஒருவனைக் குறிப்பிடுகின்றார் மாமூலனார்.* அவனது பாழியில் அச்சந் தரும் பேய் இருந்தது. அவனே பிண்டன் என்பவனை வென்றான். பாரம் என்னும் ஊர்க்குத் தலைவன்; ஏழில் என்னும் நீண்ட மலைக்கு உரியவன்; அம்மலைக்கு அருகில்தான் பாழியும் இருந்தது என்பர் பரணர். அவனுடைய மலைகளில் பொன் கிடைத்தது. களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல் நன்னனைப் பெருந்துறையில் தோற்கடித்ததாகப் பாடுவர் கல்லாடனார். 2 அரணைத் தாக்கி வென்று கவர்ந்த அணிகலன்களைப் பாடுநர்க்கு ஆராயாது அள்ளி வழங்கும் வள்ளன்மை மிகுந்தவன் நன்னன். புனல் நாட்டின்மீது வெகுண்டு எழுந்தான்; அவனுடைய பாழியின்கண் எதிர்த்துப் போரிட்ட ஆய் எயினன் தோற்றான் என்றும் கூறுவர் பரணர். நன்னனுக்குரியது பறம்பு மலை என்றும் பரணர் குறிப்பிடுகின்றார். பகையரசனுக்கு ஆற்றாது அரண் விட்டு அடவி சென்று சிலகாலம் இருந்து மீண்டும் போரெழுந்து வென்று தன் புகழை நிலைநாட்டியவன் நன்னன் என்று ஒருவனைப் பற்றிக் கூறுகின்றார் மோசி கீரனார். வியலூருக்கு உரிய நன்னன் வேண்மான் என்பவன் விறலியரோடு பாணரையும் புரந்தான் என் கிறார் மாமூலனார்.57 48. அகநானூறு; 15 : 10-12. 49. 8-15 : 142 ל כ. 50. 3 + 152: 10-13. 51. , 173 : 15-17. 52. 18-20 : 199 גג. 53. 5-9 : 349 3 ג. 54. 5 * 396 : 1-3. 55. 18-20 ,8-11 : 356 כת. 56. in 392 : 21-28. 57. 18.20 : 199 ג פ.