பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/287

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

285 அரண் பல வென்று நல்ல அணிகலன்களைக் கொணர் வான் ஆய் என்பவன். ஆய் எயினன் என்பான் பாழி என்னும் ஊரினிடத்தே நன்னனை எதிர்த்துச் சென்றான். அங்கே மிஞரிலி என்பவனால் கொல்லப்பட்டான் என்பர் பரணர். எழினி என்பவன் படை வீரர்களை ஏவி ஆநிரை களைக் கவர்ந்து வருமாறு செய்வான்9ே. கண்ணன் எழினி என்பான் மிகுந்த செல்வமும் படைவலியும் கொண்டவன். முதுகுன்றம் அவனுக்குரியது என்கிறார் மாமூலனார்.கே களிறுகளும் அணிகளும் பரிசிலாக வழங்கும் பாரியின் பறம்பு அரணை மூவேந்தரும் முற்றியிருந்தபொழுது, உள்ளே உறைபவர் உணவின்றி வருந்தாவாறு கபிலர் என்னும் நல்லிசைப் புலவர் கிளிகளை வளர்த்து வெளி யிலிருந்து கதிர்களைக் கொண்டுவரச் செய்தார் எனப் பிற நூலில் கூறப்படும் வரலாறு இதில் இடம் பெறுகின்றது.82 அதியன் என்பான் அள்ளன் என்பவனுக்கு அவன் தந்த, வெற்றிக்கு மகிழ்ச்சியுடன் பரிசாக நாடுநல்கினன் என் கிறார் மாமூலனார். வடதிசைக்கண் பாணன் என்னும் ஒரு தலைவனின் வளமான நாடு பற்றியும் அதில் உள்ள இடைச்சுரம் பற்றியும் பாடுகின்றார். அன்னி என்பான் திதியன் என்பவனுடன் குறுக்கைப் போர்க்களத்தில் பொருது புன்னை மரத்தின் அடியை வெட்டினான்;. அப்போது கூத்தர் புகழ் முழக்கம் எழுப்பினர். மிஞரிலி என்பவன் வாய்மை தவறாமல் நன்னன் பாழியில் இருந்த 58. அகநானுாறு; 69 : 13-20. 59. 3 * 396 . 1-6. 60. 15 105 : 9-13. 61. 5 1 . 197 : 5.8. 62. 8-13 : 303 נת. 63. H. :) 325 : 7-9. 64. jo 325 : 16-18. 65. Hil 45 : 8-12.