பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/290

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

288 நன்னகர் மாந்தை8 என்றும் குட்டுவன் மாந்தை81 என்றும் குறிக்கப்படுகிறது. குதிரைகளும் தேர்களும் கொண்ட குட்டுவனின் கழுமலம்: 8 எனப்படும். வானவரம்பன் என்பவனின் ஊர் வெளியம். 89 நீண்ட அடியுடைய ஈரப் பலாபழங்கள் நிறைந்தது ஒடுங்காடு.99 பொன்னினை ஒத்த வாகை மரம் நிரம்பிய பெருந்துறை, மேற்குத் திசையின் கண் உள்ளது. அங்கு நடந்த போரில் களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் நன்னன் என்பவனை வென்று இழந்த தன்னுடைய நாட்டினை மீட்டான். பொன்னைக் கொண்டு வரும் மரக்கலம் பெருந்துறை; அம் மரக்கலங்கள் தாக்குதலுக்கும் உள்ளாகும். அரண்கள் பல வென்ற படையினைக் கொண்ட வாடாத வேப்ப மாலை அணிந்த வழுதியின் கூடல் எனப்படுகின்றது மதுரை. அதன் நாளங்காடி மணம் நிறைந்தது என்றும் கூறப்படுகின்றது.98 முறை வழுவாத நன்னனின் பாழி’ என்றும், யாழின் இசை பொருந்திய தெருக்களை உடைய பாழி என்றும் அந்நகரில்: ஆய் எயினன் என்பானும் மிஞ்சிலி என்பானும் ஒருவருக் கொருவர் போருடன்று ஆய் எயினன் இறந்தான் என்றும் பரணர் பாடுகின்றார். பாரம் என்னும் ஊர் நன்னனுக்கு. 86. அகநானுாறு; 127 : 6. 87. H. : 376 : 17-18. 88. 2-11 : 270 כל. 89. . 5 : 395 : 6. 90. 12 : 91 ג כ. 91. ** 199 : 19-23. 92. 5 * 152 : 6-7. 93. s, 93 : 8-11. 94. > * 142 : 9. 95. 3-6 : 396 ג פ.