பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/293

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

291 பகுதிகள் சேர நாட்டுத் தொடர்புடைய பாடல்களில் இடம் பெற்றுள்ளன. ஆனால் முல்லை நில வருணனை மட்டுமே இல்லை என்பது குறிப்பிடத் தக்கது. மருதம் கொழிக்கும் நிலத்தில்தான் பாலையும் ஒரு பக்கம் இருந்து வாடுகின்றது. அந்தப் பாலை வழியை மாமூலனார் எடுத்துப் புனைகின்றார். வளம் வாய்ந்த மலைப் பகுதியின் பயன் இல்லாது ஒழியுமாறு காய்கிறது ஞாயிறு. பொல்லாத ஞாயிறா அது? இல்லவே இல்லை. பகலைத் தந்து இருளை விலக்கும் பான்மையதுதான். ஆனால் ஒரேயடியாகக் காய்வதனால் வளமான பகுதி வறண்டு விடுகின்றது. அந்த மலையில் குதித்தோடும் அருவியும் இல்லை. அது நிரப்பிச் செல்லும் அச்சந்தரும் சுனைகள் காய்ந்து கிடக்கின்றன. வழக்கமாக அச்சுனையில் நீருண்ணும் ஆண் யானை தன் நீண்ட கையை விட்டுத் துழாவிப் பார்க்கின்றது. நீர் இருந்தால்தானே! வற்றிப் போன நேரம் போலும்! படர்ந்த பாசி மட்டும் இருக் கின்றது. அதனைத் தின்றுவிட்டு ஆண் யானை, அயர்வினைத் தரும் பசியோடு கூடிய பெண் யானையுடன் ஒரு பக்கத்தில் ஒடுங்கிக் கிடக்கின்றது. நீர் வற்றிப் போன அந்தப் பாலை வழியில் கொளுத்தும் வெயிலால் மூங்கில் கணுக்கள் எல்லாம் பிளந்து வெடித்துப் போகின் றனவாம். முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து நல்லியல்பு இழந்து நடுங்குதுயர் உறுக்கும் காட்சி இது. மான்கள் கூட்டமாக ஒரு மரத்தின் கீழே தங்கியிருக் கின்றன. பாலைவனத்தில் வெயில் கொடுமை மிகுதியாக இருக்கும் காரணத்தால் எங்கும் நிழல் பெறாமல் அங்குத் தங்கி இருக்கின்றன. அங்கும் நிழல் என்று சொல்லத் தக்கது இல்லை. இலையற்று உலர்ந்த கிளைகளே மரத்தில் உள்ளன. அந்தக் கிளைகளில் சிலந்தி நூல் பின்னியிருக் 114. அகநானூறு; 91 : 1.7.