பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/294

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

292 கின்றது. கிளைகளும் அசைகின்றன. அந்நிலையில் கிடைத்த பயனற்ற நிழலில் மான்கள் தங்கியிருக்கின்றன. பசிக்கொடுமை தாங்க முடியாமல் மரல் தின்கின்றன. மரலும் வாடி வதங்கி உள்ளது. அப்போது ஊசியின் திரண்ட முனைபோன்ற திண்ணிய பற்களை உடைய செந் நாய்கள் அவற்றைத் தாக்குகின்றன. மான்கள் அலறி ஒடுகின்றன. காற்றின் முன் பூனைப் பறத்தல்போல் மூலைக்கு ஒன்றாக ஒடுகின்றன. தன் இனம் காணாமற். போனது கண்ட கலை மான், கதிரவன் மறையும் மாலைப் பொழுது ஆனதும் அவற்றை ஒன்று சேர்ப்பதற்காகத் தன் ஆண் குரலால் அழைக்கிறது. ' குறிஞ்சி நிலக் காட்சிகள் அழகொழுகப் புனையப்படு கின்றன. குரங்கும் பலாப் பழமும் இணைத்துப் பாடப் படுகின்றன. பலாப்பழம் குரங்கு விரும்பும் இனிய உணவு. அதைத் தேடிப்பெறும் ஆண் குரங்கு தன்னோடு சேர்ந்து உண்பதற்காகத் தன் துணையை அழைக்கின்றது. இதைக் காணும் புலவரின் கலைமனம், அதன் எதிரே ஆடிவரும் ம்யிலைக் கண்டு மகிழ்கிறது. குரங்கின் கைக்குள் தழுவப் பட்டு நிற்கும் பலாப்பழம் முழவாக, குரங்கு முழவனாக மயில் விறலியாகக் காட்சி அளிக்கிறது. வளைந்த பலாமரத்தில் குடம் போன்ற பெரிய பழம் ஒ ன் று பழுத்திருந்தது. குரங்குக் கூட்டத்திற்குத் தலைவனான ஆண் குரங்கு ஒன்று அதைத் தழுவிக் கொண்டுள்ளது. ஒலி செய்யும் அருவி விழும் பாறையின் பக்கமாக ஆடும் மயில் ஒன்று அதற்கு முன்னே செல் கின்றது. கூத்தர் திருவிழாக் கொண்ட ஊரில் விறலியின் பின்னே முழவு இசைப்பவன் செல்லுதல்போல் தோன்று கிறது, அந்தக் குரங்கின் காட்சி. அது அவ்வாறு பலாப் பழத்தைத் தழுவிக் கொண்டே உடன் உண்பதற்காகத் 115. அகநானூறு:199 : 5-12.