பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/295

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

293 தன் துணையான பெண் குரங்கைக் கூவி அழைக் கின்றது. ே மருத நிலம் வயல் சூழ்ந்து விளங்குவது. ஆறுகளும் பொய்கைகளும் நீர் நிறைந்து வளம் செய்கின்றன. ஆம்பல் தாமரை முதலிய மலர்களும், வரால் வாளை முதலிய மீன் களும், எருமை முதலிய விலங்குகளும், நாரை முதலிய பறவைகளும் இங்குப் புலவரின் கற்பனையைத் துாண்டுவன. மருத நில வளத்தை விளக்க விரும்பிய நக்கீரர் ஒரு பாட்டில் வரால் மீனின் வலிமையையும் செருக்கையும் கூறி விளக்குகிறார். மீன் பிடிப்பவரின் துண்டிலுக்கு வயப்படாமல் அதில் மாட்டியிருந்த இரையை மட்டும் தின்று பலவகைக் கொடிகளையும் சிதைத்து அவர்கள் துரண்டிலை இழுக்க இழுக்க வராமல் பொய்கையையே கலக்கி விடுகிறதாம். இந்தக் காட்சியைக் காட்டும் புலவர் இதற்கு உவமையாக மற்றொன்று எடுத்துரைக்கிறார். கயிற்றால் பிணித்து இழுக்கும்போது, இழுப்போரை அலைத்து ஆட்டும் சினம் கொண்ட எருதுபோல் அந்த வரால் கலக்குவதாகக் கூறுகிறார். பிளந்தாற்போன்ற வாயும் பல வரிகளும் உடையது பெரிய ஆண் வரால் மீன். மீன் பிடிப்பவரின் எறிந்த துரண்டிலில் தனக்கு எமனாக வந்த இரையை அது விழுங்கி விடுகிறது. உடனே அந்த இரும்பின் முனையில் அகப்பட்டுக் கொள்வதால் தப்பித்துக் கொள்ளப் போராடுகின்றது. ஆம்பலின் மெல்லிய இலை கிழியுமாறும் குவளையின் மலர்கள் பல சிதையுமாறும் பாய்ந்து மேலெழுகின்றது. அங்கே பின்னிக்கொண்டுள்ள வள்ளைக் கொடியைக் கலக்கு கின்றது. தூண்டிலிட்டவன் இழுக்கிறான். அவன் இழுக் கவும் அது வரவில்லை. கயிறு இட்டுப் பிடிக்கும்போது 116. அகநானூறு: 352 : 1-7.