பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/296

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

294 போராடும் சினம் மிக்க எருது போல் செருக்கு மிகுந்து விடியற்காலத்தில் குளத்தைக் கலக்குகின்றது.' நெய்தல் என்னும் கடற்கரைப் பகுதி மற்ற நிலங் களைப் போல் வளம் இல்லாதது; ஆயினும் எந்த நிலப் பகுதியில் நீர் அற்றுப்போனாலும் கடல்வற்றுதல் இல்லை. -- ஆதலின் வறட்சி என்பது கடற்கரை அறியாதது. கடற்கரையில் ஒரு துன்பக் காட்சியை எடுத்துரைக் கின்றார் நக்கீரர். பரதவச் சிறுவர் இட்ட வலையில் ஆண் நாரை ஒன்று அகப்பட்டுக் கொள்கிறது. அதன் துணையான பெண் நாரை தன் கூடுகளுள்ள பனை மரத்தில் உட்கார்ந்து வருந்துகிறது. கூட்டில் குஞ்சுகளைத் தழுவிய வாறு துயருற்று இரைதேடி உண்ணவும் மனம் இல்லாமல் வாடுகின்றது. இடையிடையே தன் துணையை அன்பான குரலில் கூவி அழைக்கின்றது. கரிய குழம்பிய சேறு உள்ள வயலில் காலையில் வேட்டையாடச் செல்கின்றனர் சிறுவர் சிலர். கொழு மையான மீனை உணவாகக் கொண்ட அந்தச் சிறுவர் களின் (நுண்ணிய கயிற்றால் ஆகிய அழகிய) வலையில் அகப்படுகின்றது ஆண் நாரை. அதன் வருகையை எதிர் பார்த்து வருந்துகிறது பெண் நாரை. மாலை வேளையில் தனித்துத் தங்கியிருக்கும் போது இரையும் தின்னாமல் வருந்துகிறது. துன்பப்படும் குஞ்சுகளைத் தழுவிக் கொண்டு பனைமரத்தின்மேல் இருந்து அன்பு தோன்ற ஒலிக்கிறது. இந்த இயற்கைக் காட்சிகள் மனித வாழ்க்கையில் ஏற்படுத்தும் மாற்றம் குறிப்பிடத்தக்கது; உயர்ந்தது; போற்றற்குரியது. தமிழ் இலக்கியங்கள் முற்ற முடிந்த அளவிற்கு இயற்கையின் பின்னணியில் எழுந்திருக்கின்றன 117. அகநானூறு 36 : 1.8. 118. 2 3 290 : 1-7.