பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/297

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

295 Grotliff. (The influence of Nature as obtained in thee Tamil land on poetry was final and far-reaching and for more decisive than the influence it has exerted on the poetry of any other people in the world)*** அகப் பொருள் நுட்பம் அகப்பொருள் நுட்பமானது; ஆனால் சுவையானது. அகப்பொருளில் இடம் பெறும் தலைவியும் தலைவனும் தோழியும் நற்றாயும் செவிலித்தாயும் முதலானோர் அருமையான வாழ்க்கைப் படைப்புகள். பேசாது புலம்பும் தலைவிக்குப் பேசியே ஆறுதல் ஊட்டும் தோழியின் அறிவுத் திறன், உலகக் கூர்மை திகைப்பூட்டும். தலைவியின் வனப்பைப் புகழ்ந்து கூறும் பாடல்கள் எண்ணில. அவளுடைய கண்ணையும் நுதலையும் கூந்தலை யும் மேனி எழிலையும் புனைந்திடும் மிகச் சிறு சொற் றொடரிலும் அகப்பொருள் கருத்துகளை அமைத்து விடும் நுட்பத்தைக் கண்டு மகிழலாம். அவளுடைய பார்வை, கண்களின் பாவையை மறைத்து நிற்கும் நடுக் கந்தரும் குளிர்ந்த நீருடையது எனப்படுகின்றது. குவளை மலர் போன்ற கண் என்றும், நீல மலர் போன்ற கண் என்றும் கூறிப் புகழப்பட்டவை பணிவார் கண் 121. எனச் சொல்லப்பட்டதில் தலைவன் பிரிவை எண்ணியதால் ஆற்றாமையும், அதனால் மிகும் அழுகையும் பேசாத வாயாகிய கண்கள் மூலம் பேசுகின்றன. மலரின் வண்ணம் இழந்த கண்கள் 122 வளை நெகிழ்ந்த தோள்கள்: கவின் இழந்த தோள் 124 என்பவற்றால் 119. S. Thaninayagam ; Nature in Ancient Tamil Poetry : p. 40. 120. அகநானூறு; 5 : 21. 121. 1 : 37 : 19. 122. 5 : 197 : 1. 123. 15 197 : 9. 124. ,, 209 : 1.