பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/298

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

296 தலைவியைப் பசலை படர்ந்துள்ளது; தலைவன் பிரிந் துள்ளான்; வருவானோ மாட்டானோ என்ற ஐயத்தால் ஒளியிழந்த உறுப்புகள் போல் வாழ்க்கையிலும் நம்பிக்கை ஒளி குறைந்துள்ளது என்பது புலப்படுத்தப்படுகின்றது. தலைவி மேல் தலைவன் கொண்டுள்ள காதல் எத்துணை அரியது என்பதை அகநானுாற்று அடிகள் சுவை யுடன் புலப்படுத்துகின்றன. பேயும் இயங்காத நள்ளிரவில் சென்று தலைவன் தலைவியைச் சந்தித்து மகிழ்ந்தான் 'உ' அரசன் கொல்லி மலையுச்சியில் தெய்வத்தச்சனால் எழுதப் பட்ட அழகிய பாவை போன்ற வனப்பு நிறைந்தவள்.'" அவள் அழகை, எழில் நலத்தை, வகையமை வனப் பைத் துறந்துவிட்டுப் பொருள்மேற் செல்ல யாருக்குத்தான் மனம் வரும்? களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் இழந்த நாட்டை மீண்டும் நன்னனிடம் இருந்து பெற்றான். அந்த நாட்டின் வளத்தைப் பெறுவதாயிருந்தாலும் போ ேக ன் என்கிறான். நள்ளென்.யாமத்து நாடி வரவைத்து விடுகின்றது காதல். அவளுக்கு ஏற்பட் டிருக்கும் கட்டுக்காவல்-அந்த இற்செறிப்பு நன்னன் பாழி நகரக் காவல் போன்றதென்றும் கொற்றச் சோழர் குடந்தை நகரில் நிதியை வைத்துக் காக்கும் காவல் போன்றதென்றும் நயம்படக் கூறப்படுகின்றது. போன தலைவன் போனவன்தானோ? பொருளினுஞ் சிறந்தவள் என்று தோழியால் கூறப்படும் தலைவியினை நாடி மீண்டும் வருவானோ? நெஞ்சைக் கலக்குகின்றது நினைவு. வரலாற்று அகப்பொருள் செய்தியே இங்கே வந்து அமைந்து விளங்குகின்றது. ஆட்டத்தில் வல்ல ஆட்டனத்தியைக் 125. அகநானூறு, 62 : 6. 126. . 5 - 63 : 13-16. 127. ,, 199: 22-24. 128. 5 : 15 : 10-11. 129. - 2 - 60 : 13-15.