பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/299

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

297 காவிரியாறு அடித்துச் செல்லவும் அவன் தலைவி இழந்ததை எண்ணி ஏங்கிப் புலம்பியதைப் போல் நெஞ்சம். கலங்குகின்றாள். 189 அன்புடன் கூந்தலை நீவிவிடும் தலைவர் இன்று பிரிந்து விட்டார். நாம் நோயுற் றுழந்து வாடினாலும் அவர் வினை முடித்து மீளுவாராக: என்றும் தலைவியின் சால்பினைப் பாலை பாடிய பெருங் கடுங்கோ உணர்த்துகின்றார். தலைவன் நெஞ்சம் நெகிழத்தக்கனவற்றைக் கூறி அன்பினால் உள்ளங்கலந்து என்றும் பிரியாமைக்குரிய சூளுறவு செய்வான். ஆனால் பொருளிட்டும் வேட்கையில் போயதென்ன? என்கிறாள் தலைவி.188 தோழி ப்ெரிய சொல்லாற்றல் படைத்தவள். அறி. ஞர்க்கு விருந்தும், அறியாதார்க்குத் தெளிவும் விளைக்கும் ஆற்றல் மிகுந்த அறிவு நிறைந்தவள். தலைவியிடம், பேசும்போதும் சரி, தலைவனிடம் உரையாடும்போதும் சரி, தாயிடம் நயம்பட உரைக்கும்போதும் சரி எப்படிச் செய்ய வேண்டுமோ அப்படி எடுத்துச் சொல்லி எதையும் முடித்துவிடுபவள் அவள். தலைவர் வருவாரோ எனத் தவிக்கின்றாள், தலைவி. அவளை ஆற்றுவது எங்ங்னம்? மென்மையாக வெவ்விய உயிர்ப்பினை உயிர்த்து இரவும் பகலும் துன்பம் நலிய வருந்திப் பாம்பு விழுங்கிய திங்களைட்போல் நெற்றி ஒளியினை இழந்திடத் தலைவனை யன்றி வேறு ஆதரவு இல்லாத தலைவி இல்லில் தங்கி இருக்கப் பொருள் விரும்பிச் சென்றான் தலைவன். அவரோ உள்ளத்தைக் கவர்ந்தவர். பணமிழந்த பையைப் போன்று பாம்பு உடல் வாடிக் கிடக்கும் வறட்சி மிக்க காட்டிடத்தே ஆறலைப்போர் அம்பினை எய்தலால் இறந்துபட்டோராகிய புதியவர்களது பிளந்த புண்ணி 130. அகநானூறு, 45 : 13-14. 131. 3 * 155 ; 4. 132. 5 : 155 : 5-6. 133. 1-3 :267 כל.