பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/300

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

298 னின்றும் இழியும் செந்நீரைக் குடித்துக் காகங்கள் ஒற்றராகச் செல்லும் மக்களைப்போல உள்ளடங்கிய குரலின வாய் மனையிடத்தே வந்து தங்கும் இடம் அது. அம்மலை வழி கடந்து சென்ற தலைவன் அருள் மிகுந்து விடு திரும்புவான். தோழியின் மதி நுட்பம் இங்கே விளங்கு கின்றது. வற்றிய பாலையில் வற்றாத அன்புடன் காகம் வீட்டிற்குத் திரும்பி வரும் காட்சியைக் கண்ட தலைவன் கண்டிப்பாக அன்பு கொண்டு திரும்புவர் என்பதால் தலை விக்குத் தலைவர் வருவார் என்ற நம்பிக்கை ஊட்டி ஆற்றுவிக்கின்றாள் தோழி.' பாலை பாடிய பெருங்கடுங்கோ இந்த ஒவியத்தைப் படைத்துக் காட்டுகின்றார். H தலைவியைத் தழுவிய தழுவலைத் தலைவன் நினைவு கூர்ந்து விடுகின்றான். தாங்குமா துயரம்? எப்படிப்பட்ட தழுவல்? மெய்யினுள் மெய்புகுத லொத்த கைகளால் விரும்பிக் கொள்ளும் மயக்கம்.181 இதனினும் பெரிதோ பொருள் என்று துக்கி எறிகின்றான் செலவு மேற்கொள்ளும் எண்ணத்தை! அகநானூற்றுப் பாடல்கள் சில பற்றி உள்ளுறை அமைந்து அகப்பொருளை நுட்பத்துடன் விளக்குகின்றன. வெளிப்படையானன்றிக் குறிப்பாற் பொருளைப் புலப் படுத்தும் உவமம் உள்ளுறை" எனப்படும். (Indirect suggestion by which an author who does not propose to explicitly state his idea, endeavours, however to present it through the skilful employment of such telling comparisons as would help people to infer therefrom what he actually intended to convey)*** 134. அகநானூறு 313:1-10, 135. 15 : 379 ל ג. 136. தொல். பொ. 48. 137. Tamil Lexicon; p. 474.