பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/301

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

299 பிளந்த வாயினையும் பல் வரிகளையுடைய பெரிய வரால் மீன் வளைந்த வாயினையுடைய தூண்டிலில் உள்ள தனக்குக் கூற்றமாகிய இறையினை விழுங்கி, ஆம்பலது. மெல்லிய இலை கிழிய மேலெழுந்தும் குவளையின் அரும்பு மலர்ந்த பல மலர்களும் சிதையும்படி பக்கத்தே பாய்ந்தும் பிணக்கம் மேவிய அழகிய வள்ளைக் கொடியினைக் கலக்கி யும் தூண்டிலிட்ட வேட்டுவன் இழுக்கவும் வாராமல் கயிறிட்டுப் பிடிக்கும் சினமிக்க ஏறுபோலச் செருக்குமிக்கு விடியற்காலத்தே குளங்களைக் கலக்கும் பூக்கள் பொருந்திய ஊரன். இங்கே ஒர் உள்ளுறை அமைந்து நயம் விளக்கு கின்றது. வேட்டுவன் துரண்டிலில் கோத்த இரையை: நீர் நிலையின் கீழ்க்கிடந்த வாளை நுகர்ந்து துண்டில் துவக்கி விடாது இலை கிழிய எழுந்து, குவளைப்பூ முறியப் பாய்ந்து, அக்குவளையைச் சூழ்ந்த வள்ளையை மயக்கி: நாட்காலத்தே எல்லாருங் காணக் கயத்தை உழக்கு கின்றாற்போல, பாணனுடைய நெஞ்சு வலிதாய்ப் புறம்பு மெல்லிதாயிருக்கின்ற இன் சொல்லாலே இன்பத்தை கலந்து நுகர்ந்து அப்பரத்தையர் தாய்மார் நெஞ்சவிழுந்த அவ்விடத்தை விடாத அன்புடனே போந்து, நாங்கள் நுமது நிறங்கண்டு வருந்த இங்கே வந்து குவளை மலர் சூழ்ந்த வள்ளைபோலும் எங்கள் சுற்றத்தார் மயங்க, அவர்களை வருத்தி, ஊரையெல்லாம் இப்படி எல்லாருமறியக் கலக்கு வான் ஒருவன் அல்லையோ என்று தோழி உணர்த்து வதாகப் பொருள் விளங்குகின்றது. மீன் பிடிக்கும் தொழிலில் தங்கிய தந்தைக்கு இளமக ளானவள் மீன் கொண்டு வருவதற்கு முன்னே தான் உப்பு' விற்ற நெல்லாலே ஆக்கப்பட்ட மூரல் வெண்சோற்றையும் புளிக்கறியையும் சொரிந்து கொழுமீன் தடியொடு கொடுப் பாள். 189 இங்கே அமைந்துள்ள உள்ளுறைப் பொருளாவது _ 138. அகநானூறு; 36 : 1.8. 139. 3-6 נג.