பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/302

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

300 தலைவியை மணந்து கொள்வதற்குத் தலைவன் செய்யும் முயற்சி, தந்தை மீன்பிடி தொழிலில் இறங்கி மீன் பிடித்துக் கொண்டிருப்பதும், தலைவியும் தோழியும் செய்யும் முயற்சி, இளமகள் தன் முயற்சியால் உப்பு விற்றுச் சோறு கொண்டு போதலும் எனப்படுகின்றன. உள்ளுறையினைப் பற்றி டாக்டர் வ. சுப. மாணிக்கம் அவர்கள் குறிப்பிடுவது கருதத்தக்கது. (As ullurai is formed out of Natural objects, it provides both the background and similitude in Aham poetry. At the same time ullurai brings out the all-round knowledge of the Poet and his keen observation of the similarities and dis-similarities in the sexual sphere between animals and human beings.) *** தலைவர் செல்லும் வழியிலும் அன்பான காட்சிகள் உண்டு. எனவே நம்மை மறந்துவிடுவார்; பொருளே பொருளாகப் போய் விடுவார் என்று எண்ண வேண்டா என்கிற தோழி அவர் சென்ற சுர நெறியில் காட்டும் சுவை டயான அன்பினைக் கண்டு மகிழலாம். நிறைந்த சூலினை உடைய இளைய பிடியினைத் தழுவிக்கிடந்த வெள்ளிய கோட்டினையுடைய இனத்துடன் கூடிய களிறு, கன்று தம் மீது ஏறி இறங்கப் படுத்திருக்கும். இந்த அன்புக் காட்சி யைக் காணும் தலைவனுக்குக் குடும்பத்தின் நினைவு கண்டிப்பாக வரும்; வந்த நினைவு அவன் நெஞ்சை வாட்டாதோ? எனவே விரைந்து வருவார் என்ற நம்பிக்கையை ஊட்டுகின்றாள் தலைவி. (The Sangam Poets have not only pointed landscapes as seemic backgrounds for the play of human love, but have also depicted their heroes and heroines as projecting their own personal feelings into Nature and discovering there, sometimes a sympathetic response to their emotions, at other times an unsympathetic repulse)” 140. The Tamil Conecpt of Love; pp. 231-232. 141. Dr. M. Varadarajan; The Treatment of Nature in Sangam Literature: p. 356.