பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/303

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

301 முயன்று செய்ய வேண்டி சிறந்த பொருளைக் கடத்தற். கரிய பாலை வழியினைக் கடந்து சென்று எளிதிற் பெற். றாலும் தலைவியை விட்டுப் பிரிந்து வாரேன் எனத் தன் நெஞ்சிற்குச் செலவழுங்கினான். 42 சேரலாதன் கடலின் நடுவே இருந்த பகைவர்களை அவர் காவல் மரமாகிய கடம்பினை வென்று இமயத்தில் தன் இலச்சினையைப் பொறித்து மாந்தையெனும் ஊரில் உள்ள தனது முற்றத்தில் பகைவர் திறையாகக் கொடுத்த நல்ல அணிகலன்களுடன் பொன்னால் இயன்ற பாவை யினையும் வயிரங்களையும் குவித்து நிலந்தின்னும்படி விட்டொழித்த பெரு நிதியத்தைப் போன்ற பொருளை ஒரு நாளில் ஒரு பகற்பொழுதில் பெற்றாலும் தாம் சென்றுள்ள அந்நாட்டில் குற்றமற்ற நம் காதலர் பிற்றை ஞான்று தங்காது வருவர். இந்த அகநானுாற்றுச் செய்திகளோடு பட்டினப்பாலையின் தலைவன் முட்டில்லாத சிறப்பினை உடைய காவிரிப்பூம்பட்டினமும் தனக்குக் கிடைப்பதாக இருப்பினும் தன் காதலியை விட்டு நீங்கிப் பொருள்வயிற். செலவு ஒருப்படேன் என்று கூறிய காதலின் ஆழம் நினைவு கூரத் தக்கது. * 1. அகநானூறு: 149 : 5-7. 3. 3 3-12 : 127 "כ 4. பட்டினப் பாலை; 218-220. முட்டாச் சிறப்பின் பட்டினம் பெறினும் வாரிருங் கூந்தல் வயங்கிழை யொழிய வாரேன்.' ‘. . .