பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/304

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. புறங்ானுாறு எட்டுத்தொகை நூல்களுள் புறப்பொருள் பற்றியன :பதிற்றுப்பத்தும், புறநானுாறும் ஆகும். புறமாவது ஒத்த அன்புடையாராலே அன்றி, எல்லாராலும் அனுபவித்து உணரப்பட்டு இஃது இவ்வாறு இருந்தது எனப் பிறர்க்குக் கூறப்படும் பொருளாகும். இந்நூற்கண் உள்ள நானுாறு செய்யுட்களையும் பாடியவர்கள் ஒரு காலத்தாரல்லர்; ஒர் இடத்தாரல்லர். இத் தொகுப்பில் பாடப்பட் டோருள் முதலில் முடிவேந்தர்க்குரிய பாட்டுகளும், பின்னர், குறுநிலத் தலைவர்களுக்குரிய பாட்டுகளும், அவற்றின் பின் புறத்திணையை விளக்கும் சில துறைகளுக் குரிய பாட்டுகளும் இடம்பெற்று இறுதியில் முடிவேந்தர் களுக்குரிய பாட்டுகள் இடம் பெற்றுள்ளன. நல்லிசைப் புலமை மெல்லியலார் பலர் இத் தொகை நூலுள் நயங் கெழுமிய பாடல்களைப் பாடியுள்ளனர். பழந்தமிழ் மக்களின் வாழ்வினையும், பண்பாட்டுச் சிறப்பினையும், சிறக்க உணர்த்தும் நூல் இஃதெனலாம். பழந்தமிழ் நாட்டு வரலாற்றில் கருவூலமாக இந்நூல் திகழ்கிறது. தமிழரின் அரசியல் கொள்கைகள், வாணிக மேம்பாடு, சமயநிலை, அறிவுத்திறம், நாகரிக மேம்பாடு, கொடைச் சிறப்பு முதலியன எல்லாம் கொண்டு இந்நூல் மிளிர் கின்றது. புறப்பொருள் அமைதிகள் இந்நூலுள் விளங்க உரைக்கப்பட்டுள்ளன. இ ல க் கி ய நயம் செறிந்த செய்யுட்கள் பல இந்நூலுள் இடம் பெற்றுள்ளதால், இந்நூல் தமிழ்ச்சுவை தேடும் மாணவர்க்கு ஒர் இலக்கியக் கேணி என்றும், பழமையைத் துருவுவார்க்குப் பல பொருள் நிறைந்த பண்டாரம் (treasury) என்றும், தமிழ்நாட்டுத் தொண்டர்க்கு விழுமிய குறிக்கோள் காட்டும் மணி விளக்கு என்றும் அறிஞர் ரா. பி. சேதுப்பிள்ளை அவர்கள்: 1. திரு பேராசிரியர் ரா. பி. சேதுப்பிள்ளை; தமிழ் இன்பம் : ப. 22.