பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/305

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

303 பாராட்டுவர். இந்நூற்கண் வழங்கும் சொற்களுள் தொண்ணுாற்று நான்கு விழுக்காடுச் சொற்கள், நாட்டு மக்கள் பேச்சு வழக்கில் இன்றும் உள்ளன என்பர் அறிஞர்.2 புறநானுாற்றுப் பாடல்களில் கற்பனைக் கூறுகளும், உயர்வு நவிற்சியும் மிகக் குறைவாதலின், வரலாற்று அறிஞர்கள் இந்நூலினைப் பண்டைத் தமிழர் வரலாற்றை அறிந்துகொள்வதற்குப் பெரிதும் து ைண கொள்ளு கின்றனர். காலஞ்சென்ற ஜி. யு. போப் அவர்களுக்குத் தமிழில் அன்பு உண்டாவதற்கு முக்கிய காரணமாக இருந்தவற்றுள் இப்புறநானுாறும் ஒன்றாகும். புறநானுாற்றில் எழுபத்துநான்கு பாடல்கள் இடம் பெற்றுள்ளன. இப்பாடல்களில் அமைந்துள்ள சமுதாய வாழ்வு புறப்பொருட் செய்திகள், இயற்கை வருணனை அரசியல் செய்திகள், வரலாற்றுக் குறிப்புகள், கவிதைச் சிறப்பு, உவமைகள் முதலியவற்றினைக் காண்போம்: சமுதாய வாழ்வு தங்கத் தமிழகத்தின் தலைசிறந்த நாகரிகத்தைத் தரணியெங்கும் பறைசாற்றும் எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான புறநானுாறு, தன்னகத்துப் புறக் கருத்துகளை மட்டுமேயன்றி, அன்றைய தமிழகத்தின் சேரநாட்டு மக்களது சமுதாய வாழ்வு, அரசியல் செய்தி, அவற்றினுாடே வரலாற்றுக் குறிப்புகள், தலைசிறந்த உவமைகள், இயற்கை வருணனை, கவிநயம் ஆகியவற்றையும் புதைந்து வைத்துக் கொண்டிருக்கிறது. முதற் கண் புறநானுாறு காட்டும் சேரர் சமுதாய வாழ்வினைக் காண்போம்.

2. கலைக்களஞ்சியம்; ஏழாம் தொகுதி: பக். 527. 3. 2, 5, 8, 11, 13, 14, 17, 20, 22, 48-50, 53, 54, 65, 74, 87-104, 127-140, 206, 207, 210, 211, 229-232, 235, 240, 241, 245, 282, 315, 343, 346, 367, 369, 374, 375, 380, 387, 390, 392, 396, 398.