பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/306

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

304 மக்கள் வாழ்வு மன்னுயிரெல்லாம் தம்மை ஆ ளு ம் மன்னனுக்கு அஞ்சினவராய், நால்வேத நெறியினும், தம் நெறி யினின்றும் திரியாத தன்மையாளராய், அருளும், அன்பும் உடையோர் மாட்டேயன்றி, ஏனையோரிடத்து மனம் ஒன்றாதவராய், உயர் வாழ்வு வாழ்ந்தனர். அந்தணர் செய்தற்கரிய க - னா கி ய ஆவுதியைப் பண்ணும், ஆகவனியம், காருகபத்தியம், தென்றிசையங்கி என்ற முத்தீயை வளர்த்தனர்." - மழலைச் சிறப்பு இளம்புதல்வர் வழங்குஞ் சொல்லோசையில் யாழினது இனிய ஓசை காணப்படாதாயினும் அவர்கள் சொல்வழிப் பிறக்கும் இன்பத்திற்கு யாழிசையின் இன்பம் நிகராகாது தாழ்வுபடும் என்பதால் மக்கட்பேறு சிறப்பாகக் கருதப் பட்டது என அறியப்படுகிறது. விருந்தோம்பல் அதியமான் நெடுமானஞ்சியை, ஒ ள ைவ ய ா ர் பாராட்டிக் கூறும்போது, எந்நாளும் செல்வமுண்டாயின் உணவு கொடுத்து, இல்லையாயின் உள்ளதைப் பலரோடு கூட உண்ணும் பெருந்தகையோன் என்று மன்னனின் விருந்தோம்பும் செய்கையைக் குறிப்பிடுகிறார்.9 மற். றொரு பாடல், அகன்ற நீர்த்துறைக்கண் தம் வில்லால் வீழ்த்தப்பட்ட முள்ளம்பன்றியின் கொழுவிய ஆனும், == 4. புறநானூறு, 20 : 21. 5. 5 : 2 : 8. 6. 6–5 : 5 גל. 7. 3 or 2 : 22-23. 8. : In 92 : 1-3. 9. 6-7 : 95 נג.